கதைன்னு பார்த்தா நாம நிறைய வாட்டி தமிழ் படங்கள்ள பார்த்த கதை தான்.
கிராமத்தில் ஏழை குடும்பம் கதாநாயகிது. அதே கிராமத்தில் வாழும் இன்னொரு ஏழை இளைஞனை காதலிக்கிறாள்.
அந்த ஊர் கவர்னருக்கு குழந்தை இல்லை. ஆண் வாரிசு வேண்டி, சிறிய தவறால் கவர்னர் முன் மண்டியிட்டு கிடக்கும் கதாநாயகியின் தந்தையை காப்பாற்ற கவர்னரை மணக்கிறாள்.
பொருந்தா திருமணம், பிடிக்காத வாழ்க்கை.
கதாநாயகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.
7 வருடங்கள் ஓடிவிடுகிறது. காதலனை மீண்டும் சந்திக்கிறாள். தடையான காதல் மீண்டும் துளிர்க்கிறது. அப்புறம் என்ன ஆகிறது என்பதுதான் படம்.
கதை சாதாரண கதைதான் ஆனால் எடுத்த விதம் அற்புதம். அழகான மலைகள் சூழ்ந்த கிராமத்தை அவ்வளவு அழகா காட்டியிருக்காங்க.
இந்த படம் முழுக்க, எமோஷன்ஸ் தான்.
அதனாலதான் விஷுவலா மற்றும் பின்னணி இசைல கலக்கியிருக்காங்க. இல்லைன்னா ரொம்ப சாதாரணமான படமா இருந்திருக்கும்
காதல்னு வந்துட்டா காமம் கண்டிப்பா இருக்கும்.
படங்கள்ள காமத்தை காட்டுவதில் ரெண்டு முறை இருக்கு.
ஆங்கில படங்கள்ள வரமாதிரி மிருக உணர்ச்சிய, நிர்வாணத்தோட சேத்து காட்டுவது. தமிழ் படங்கள்ள வரமாதிரி சில ஆங்கிள்ள விரசமா காட்டுவது. இந்த படத்தில், ஒரு பக்கம் பிடிக்காத வாழ்க்கையின் காமம், இன்னொரு பக்கம் காதலனுடன் காமம்.
காமத்தை கவிதை மாதிரி அவ்வளோ அழகா காட்டியிருப்பாங்க.கவர்னருடன் சேர்க்கையில், கதாநாயகின் கைகள் தன் மார்பகங்களை மறைத்துக்கொண்டு கவர்னர் முகத்தை பார்க்க பிடிக்காதவள் போல தலையை திருப்பி சைடில் பார்ப்பாள்.
அப்போ அவள் கண்கள் உண்மையை சொல்லும். அதே மாதிரி காதலனுடன் இருக்கும் போது அவள் விருப்பமும் அதுவே ஆகையால் காதலன் சேர்க்கை வேண்டும்ன்னு காதலியின் தொடைகள் மீது கை வைத்து அவளிம் முகத்தை பார்ப்பான்.
காதலி தனக்கு விருப்பம்தான்னு கண்களை மூடி தலையை குனிவாள். காதலன் அவளின் தொடைகளை திறந்து காமம் கொள்வான்.
லைட்டிங், பின்னணி இசை, காமெரா ஆங்கிள்ன்னு மொத்த சீனையும் கலக்கியிருக்காங்க.
காமம் மட்டுமில்லை இந்த மாதிரி பல சீன்களில் இசை மற்றும் விஷுவல்ஸ் மூலம் அந்த சீனுக்கான emotionsஐ ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க படம் முழுக்க.
7 வருடங்கள் கழித்து மார்கெட்டில் தன் காதலனை சந்திப்பது, பின் ஒரு மழை இரவில் இருவரும் பேசிக்கொள்ளுவது என பல சீன்களில் நம்மை எமோஷணலா கட்டிபோட்டுடறாங்க.
Victor Vu is the director who is an Vietnamese - American writer director
Music by Christopher Wong
Camera by Dominic Periera
Must watch - Available in Netflix