Breaking News :

Thursday, November 21
.

The Search மூவி ரெவியூ


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மைக்கேல் ஹலனா விஸிஸ் அவர்களின் இயக்கத்தில் உருவானதோர் போர் காலத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட  ப‌டம். பாதிக்கப்பட்ட சிறுவனாக அப்துல் ஹாலிம் மிக அருமையாக பொருந்தியிருக்கிறான். குழந்தைத்தனமும், இழப்பின் சோகமறியாத சுட்டித்தனமும் அவனைச் சுற்றி அரங்கேறும் அரசியல் நாடகங்களுடன் அழகான சிறுவன் சிறுக சிறுக அவன் குழந்தைத்தனத்தை இழந்து சமுதாயத்தின் உண்மைகளை கிரகித்து மாறும் வாலிபனாகவும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். சிறகடித்து பறக்கும் சிறுவன் சமுதாய நடப்புகளை சந்திக்கும் வாலிபனாக, போர் வீரனாக  மாறி நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

இரண்டாவது செசானிய யுத்தம் 1999-ல் நடைபெறுகிறது. செசானியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற ஒரு தவறான கருத்தை எதிர்த்து உண்மையை உலகிற்கு கூற இயக்குநர் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சந்தர்ப்பமே இந்த திரைக்கதை. அழகாக சிறகடித்து ஆர்பாட்டமாய் பறந்து திரிந்த வண்ணத்துப்பூச்சிதான் சிறுவன் ஹாட்ஜி. சொந்த ஊரில் போரின் அவலத்தால் அவன் பெற்றோர் இருவரும் கொல்லப்படுகின்றனர். சிறுவனின் கையில் அவனுடைய இளைய சகோதரன் குழந்தையாக. சிறுவன் தன் தம்பியை சுமந்து கொண்டு ஓடுகிறான். அலை மோதும் அகதிகள் கூட்டத்தில் அவனும் ஒருவன். அவனுடைய மூத்த சகோதரி ரெய்சாவை பிரிகிறான். சுமந்து திரிந்த தன் தம்பியை தவற விடுகிறான். திக்கு தெரியாத புதிய பூமியில் அவனுக்கு அவர்கள் பேசும் மொழிகூட புரியவில்லை. அங்கே அவனுக்கு அறிமுகமாகிறாள் கோல் என்ற பெண்மணி. ஐரோப்பிய நாட்டு கூட்டாளியின் பிரதிநிதி. அவள் சொந்த வாழ்க்கையின் துன்பங்களை ஆங்காங்கே வெளிக்காட்டுகிறாள். பாசமோ, நேசமோ இல்லாமல் கடமை ஆற்றுகிறாள். ஆனாலும் சிறுக சிறுக சிறுவன் மீது இரக்கம் கொள்கிறாள். அவனும் அவள் உதவியுடன் போராட்டத்தில் வெற்றிகரமாக ஈடுபடுகிறான்.

அவன் குழந்தைத்தனம் மாறி இறுக்கமாகிறான். அங்கே ஹெலன் ஒரு காப்பகத்தின் நிர்வாகியாக அறிமுகமாகிறாள். அவளும் அழகிய மதர் தெரஸா அல்ல. தன் ஈடுபாட்டை மனதளவில் மட்டும் அல்ல தேவையான கடமையாக உணர்ந்து செயல்படுகிறாள். சிறுவனின் சகோதரி ரெய்ஸாவும் அவள் பாதுகாப்பில் இருக்கிறாள்.

ரெய்ஸா கடந்த பல ஆண்டுகளாக தன் தம்பியை தேடுகிறாள். அவளுக்கு நமிபிக்கை பலனளிக்கும் என்று உறுதியோடு தேடுகிறாள். கடைசியாக அங்கே கோலியாவை பார்க்கிறாள். ரஷ்ய போர் படையில் தன்னை இணைத்துக்கொண்டு கோலியாவை கண்டுபிடிக்கிறாள். சிறகடித்து பறந்த சிறுவன் கோலியாவாக சிறுக சிறுக போர் வீரனாக போர் படை நியதிகளை ஏற்று தன்னை தயார்படுத்திக்கொள்ளும் இறுக்கமான இளைஞனாக உருவாகிறான். இப்படி வாழ்க்கையே ஒரு தேடலாக சென்றுகொண்டிருக்கிறது!

நன்றி ராஜேந்திரன்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.