Breaking News :

Saturday, December 21
.

கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் அடைந்த துன்பங்களை


கவிஞரின் தன் வாழ்க்கையில் அடைந்த துன்பங்களை பல கவிதைகளாக்கியிருப்பார். 

அதிலும் இந்த கவிதை தான் ஒன்றுமில்லாத காலத்தில் தாய் தந்தை ஏன் அந்தக் கடவுளும் தன்னை கைவிட்டனர்.

தாய்த்தமிழ் மட்டுமே அவருக்கு உறுதுணையாக நின்றது என்பதை எழுதினார். 

"தான் பெற்ற செல்வனை ஏன் பெற்றோம் என்றுதான் தாயன்று மாண்டு போனாள்

தந்தையும் இப்பிள்ளை உருப்படாது என்றுதான் தணலிலே வெந்து போனான்

ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன் உயரத்தில் ஒளிந்து கொண்டான்

உதிரத்தின் அணுவிலே #தமிழன்னை  மட்டுமே உறவாக வந்து நின்றாள்

வான் பெற்ற பேறுபோல் யான்பெற்ற தமிழிலே வாழ்கின்றன் வண்ண மயிலே 

மலர் கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டிடும் மதுரை மீனாட்சி உமையே!!! "

ஆக தன் வாழ்வில் தமிழின் முக்கியத்தை உணர்ந்த கவிஞர் தமிழுக்கு பல கவிதைகள் படைத்தார். 

தன் வாழ்வில் இறுதி கட்டத்தில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்ப இரு மாதங்கள் ஆகும். எனவே செல்வதற்கு முன் ஒரே நாளில் 10 பாடல்களை எழுதினார். 

அதிலும் கவிஞர் தன் உதவியாளரிடம் "ராஜா குடுத்து வச்சவன்" ஏன்னா இதான் நான் எழுதும் கடைசி பாடல் என்றார். 

எழுதிவிட்டு கவிஞர் அமெரிக்கா சென்றார். சென்றவர் திரும்பவில்லை. 

தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த கண்ணதாசன் தன் இறுதி பாடலில் தன்னை வாழவைத்த #தமிழுக்கு பிரியா விடை கொடுத்தார். 

அவர் தமிழ் மீது கொண்ட காதலால் இனி பாடல் எழுத போவதில்லை என்பதாலும், அன்னைத் தமிழே நான் செல்கிறேன், என்னை மறந்துவிடாதே என்று 

" காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி" 

இந்த வரிகளை எழுதினார். 

அவர் 5000 பாடல்களை எழுதினாளும் தன் இறுதி பாடலில் அவர் நினைவுக்கு வந்தது #தமிழ் மட்டுமே!!! 

கவிஞரின் இழப்பை வாலி அவர்கள் 
எழுதப்படிக்கத் தெரியாதவர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்துவிட்டான் என்று எழுதினார். 

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் எந்த சூழ்நிலையிலும் அவரின்  பாடல் துணை இருக்கும். 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.