கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட முக்தா வி.சீனிவாசன் நினைவு தினம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள மணப்புரம், வெங்கடாச்சாரி-செல்லம்மாள் தம்பதியரின் மகனாக 31.10.1929 அன்று பிறந்தவர். இவரது தந்தை பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர்.
பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.
கும்பகோணத்திலுள்ள ஒரு தட்டச்சு பயிலகத்தில் சீனிவாசன் தட்டச்சுப் பயின்றுகொண்டிருந்தார்.
அக்காலகட்டத்தில் முக்தா வி.ராமசாமி சேலம், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தட்டச்சாளாராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1947-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார் முக்தா சீனிவாசன். ’சதி சுலோச்சனா’ என்ற படத்தில் ஆரம்பத்தில் (clap-boy)கிளாப் பாயாக பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் ‘மந்திரி குமாரி’ படத்தின் வழியாக இவர் உதவி இயக்குநர் ஆனார்.
கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ மற்றும் ஏவி.எம்.ஸ்டூடியோவில் பல படங்களுக்கு இணை இயக்குநராகவும், பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுமுள்ளார்
1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.
இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி..கவியரசர் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.
1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் 18.07.1979 அன்று ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..
தொடர்ந்து ‘பாஞ்சாலி’ [1959], ’நாலு வேலி நிலம் [1959], ஓடி விளையாடு பாப்பா [1960], பூஜைக்கு வந்த மலர் [1965], மகனே கேள் [1965], தேன் மழை [1966], நினைவில் நின்றவள் [1967], பொம்மலாட்டம் [1968], ஆயிரம் பொய் [1969], நிறைகுடம் [1969], அருணோதயம் [1971], தவப்புதல்வன் [1972], ‘சூர்யகாந்தி’ [1973], அன்பைத்தேடி [1973], சினிமா பைத்தியம் [1975], அந்தரங்கம் [1975], பனித்திரை, இதயத்தில் நீ, நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன், அன்பைத்தேடி, அந்த மான் காதலி, இமயம், அவன் அவள் அது, பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல் போன்ற பல்வேறு சிறந்த படங்களை இயக்கினார்.
இவர் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.
1981 ஆம் ஆண்டுக்கு உட்பட்டு,
பாடல்கள்- 6
படம் -2
கட்டுரை -1
ஷேர் சாட்--3
பாடல் வரி பதிவுகள்-3