இயக்கம்: Károly Ujj Mészáros
ஹங்கேரியில் இரண்டம் உலகப்போருக்கு பின் அங்கு ஏற்பட்ட பல தீவிரமான பிரச்னைகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள் இதுவரை ஹங்கேரியிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்திருக்கின்றன.
ஆனால், இப்போது கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது நடைபெற்ற பலவித ஊழல்கள் மற்றும் நிர்வாக குளறுபடிகள் பற்றிய சில திரைப்படங்கள் இப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்தப் படம் தற்போது கிழக்கு ஐரோப்பா முழுவதும் தற்போது போதை மருந்து கலாச்சாரம் பரவி வரும் சூழலில் - அந்த ஊழலை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் பலரை அதிகார வர்க்கமே கொலை செய்து அதை தற்கொலை போல சித்தரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொடர் கொலைகளை கண்டுபிடிப்பதற்காக பலவித விசாரணைகள் நடத்துவது, அதிகாரிகள் துணையோடு நடந்த அந்த கொலைகள். அதிலும் அவர் கணவரே ஒரு விக்டிம் என்பதை அறியும் போது அதிர்ச்சியடைகிறாள்.
தன்னுடைய டீன் ஏஜ் மகளை வைத்துக் கொண்டு அந்த ஊழலை கண்டுபிடிக்க அவள் தன்னுடைய போலீஸ் வேலையை செய்து கொண்டே இந்த கேஸை விசாரித்து, பலவித எதிர்ப்புக்கிடையே போராடுவது படம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறது.
மிகவும் விறுவிறுப்பான திரைக்கதை. பலவித சவால்கள் அதை எல்லம் முறியடித்து இறுதியில் அந்த ஊழல் வழக்கின் முழு விவரங்களையும் மீடியாவுக்கு போகும்படி செய்துவிடுகிறாள்.
இதனால் அரசியலில் சில மாற்றங்கள்.....
.
X- The eXploited/Hungery மூவி விமர்சனம்
.