Breaking News :

Friday, April 04
.

’யோலோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள “யோலோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல்  வெளியாகியுள்ளது.

அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே 2025 கல்லூரி விழாவில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், யோலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், முதல் சிங்கிள் பாடலான “ ஐம் ஃபரம் உளுந்தூர்பேட்டை” பாடலும் வெளியிடப்பட்டது.
இளமை துள்ளும் அட்டகாசமான இசையில் அமைந்த இப்பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Gen Z தலைமுறையைக் கவரும் வகையில், பார்த்தவுடன் ரொமான்ஸை தூண்டும் வகையில், காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் சிங்கிள் பாடல்,  திரை ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்று வருகிறது.  

நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்வில் நடந்தால் எனும் ஃபேண்டஸி தான் இந்தப் படத்தின் மையம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக,  இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படத்தை  இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
 
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில், ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் வகையிலான 6 பாடல்கள் படத்தில் உள்ளது. இதில் ஒரு அழகான மெலடிப் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும்  பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.  
தொழில் நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் - MR Motion Pictures
தயாரிப்பாளார் - மகேஷ் செல்வராஜ்  
இயக்கம் - S. சாம்
ஒளிப்பதிவு - சூரஜ் நல்லுசாமி
இசை - சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் - A L ரமேஷ்
கலை இயக்கம் – M தேவேந்திரன்
கதை - ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் - டேஞ்சர் மணி
நடனம் – கலைக்குமார், ரகு தாபா
திரைக்கதை - S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
பாடல்கள் - முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்
உடைகள் - நட்ராஜ்
உடை வடிவமைப்பு - மீனாட்சி ஸ்ரீதரன்
ஸ்டில்ஸ் - மணியன்
தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு
விளம்பர வடிவமைப்பு – யாதவ் JBS
மக்கள் தொடர்பு - சதீஷ் ( AIM )

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.