தேவையானவை:
மட்டன் - 1/2 kg
பூண்டு - 10 பல்
இஞ்சி நறுக்கிய துண்டு - 5
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்
மட்டன் மசாலா - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் மூடி
முந்திரி பருப்பு - 5
கசகசா - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
கல்பாசி - 1 ஸ்பூன்
ஜாதிபத்திரி - 1 துண்டு
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு, பட்டை ,கல்பாசி,சோம்பு, ஜாதிபத்திரி,கிராம்பு இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், மிளகு, சீரகம், முந்திரி, கசகசா அனைத்தையும் சிறிது தண்ணியை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை மெலிதாக நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மட்டனை கழுவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மட்டனை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடி எட்டு விசில் விட்டு இறக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, சோம்பு போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
மல்லித்தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
இதனுடன் தக்காளியும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு மசியவதக்கவும்.
இதனுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஒரு கொதி வந்தவுடன்அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
இதனுடன் மூன்று டம்ளர் தண்ணி குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் கடாயை மூடி அடுப்பை மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு ரெடி.