தேவையானவை:
காலிஃபிளவர் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
காலிஃபிளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.
காலிஃபிளவர் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும்.
காலிஃபிளவர் முக்கால்பாகம் வெந்ததும் சில்லி சிக்கன் மசாலா பொ, கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.
காலிஃபிளவர் நன்றாக வெந்து மசாலா வாடை அடங்கியதும் இறக்கி பரிமாறவும்.