தேவையானவை:
1கி நாட்டுக்கோழி
2பெரிய வெங்காயம்
1சிறிய தக்காளி
2மிளகாய்
1+2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
சிறிதளவுகறிவேப்பிலை
2ஸ்பூன் மல்லித்தழை
1/4கப் நல்லெண்ணெய்
மசாலா அரைக்க:
4ஸ்பூன் மல்லி விதை
6வரமிளகாய்
6காஷ்மீரி மிளகாய்
1/2ஸ்பூன் மிளகு
1ஸ்பூன் சீரகம்
1டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
10கிராம்பு
2துண்டு பட்டை
1அண்ணாச்சி மொக்கு
1ஏலக்காய்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் துண்டுகளை கழுவி வைக்கவும்.
நன்கு கழுவிய சிக்கனில்,உப்பு,மஞ்சள் தூள்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும்.
வெறும் வாணலியில்,அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து,ஆற வைத்து அரைக்கவும்.
பின்,வெங்காயம், தக்காளி,1மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு,1மிளகாய் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும்,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் சிக்கன்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து,7-10 நிமிடங்களுக்கு மூடி போட்டு,அடிக்கடி கிளறவும்.இப்படி செய்தால் கவுச்சி வாசம் போகும்.
இனி 700ml அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும்,உப்பு சரி பார்த்து மிதமான தீயில் வைத்து மூடி போட்டு நன்கு வேக விடவும். குக்கரில் செய்தால் 3-4 விசில் விட்டு எடுக்கவும்.
சிக்கன் நன்றாக வெந்திருக்கும். கடைசியாக மல்லித்தழை தூவவும். இட்லி தோசை சாதம் இவற்றிற்கு சுவையாக இருக்கும்.