தேவையான பொருட்கள்:
ரவை - 250 கிராம்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பயத்தம்பருப்பு - 50 கிராம்
மிளகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு கிராம்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தைச் சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சிறிது சூடானதும் பயத்தம்பருப்பைப் போடுங்கள்.
பருப்பு வெந்ததும் ரவை,பெருங்காயம், உப்பு அகியவற்றைப் போட்டுக் கிளறுங்கள். ரவை வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்குங்கள்.
வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வையுங்கள்.
நெய் காய்ந்ததும் முந்திரிபருப்பு, மிளகு, சீரகம் மூன்றையும் போட்டுச் சிவக்க வறுத்ததும் கறிவேப்பிலையை உருவிப் போடுங்கள்.
படபடவென்று பொறிந்ததும் இறக்கி பொங்கலில் கொட்டி நன்றாக கிளறிவிடுங்கள்.