Breaking News :

Thursday, January 02
.

சம்மந்தி சட்னி செய்வது எப்படி?


தேவையானவை:

துருவிய தேங்காய் -1 கப்.
வரமிளகாய்-2
புளி- எழுமிச்சைப்பழ அளவு.
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
சட்னி தாளிக்க,
தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
சின்ன வெங்காயம்-5.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
 
செய்முறை

முதலில் மிக்ஸியில் துருவிய தேங்காய் 1கப், வரமிளகாய் 2, புளி எழுமிச்சைப்பழ அளவு, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் 1 தேக்கரண்டி கடுகு, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 5, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கியதும் அரைத்த தேங்காயை இத்துடன் சேர்த்து கலந்துவிட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இந்த சட்னியை தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிட்டால், அல்டிமேட் டேஸ்டாக இருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.