ஆமணக்கு வேரை பொடி செய்து இதில் சீனி சர்க்கரை சம அளவு கலந்து இதை காலை மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் உட்கொண்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும் மூளைக்கு பலம் அதிகரிக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூளை நரம்புகள் பலம் பெறும் உடலுக்கு நோய் வருவதை தடுக்கும்
ஆமணக்கு இலையை நல்லெண்ணெயில் வதக்கி பெண்களின் மார்பகத்தின் மேல் போட்டு வர பால் சுரப்பு அதிகரிக்கும்
ஆமணக்கு இலையை பருப்புடன் சேர்த்து நன்றாகக் கடைந்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு இல்லாத மங்கைக்கு தாய்ப்பால் சுரக்கும் மலச்சிக்கல் நீங்கும் குடல் புழுக்கள் இருந்து வெளியேறும்.
நீராகாரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து காலை வேளையில் பருகி வந்தால் கல்லீரல் பலம் பெறும் கல்லீரலில் உள்ள உஷ்ணம் மற்றும் பெருங்குடலில் உள்ள சூடுகள் குறைந்து மலச்சிக்கல் நீங்கும் ஜீரண சக்தி அதிகரிக்கும் நல்ல பசி உண்டாகும்
ஆமணக்கின் இலையை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை இருவேளையும் சுடு நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பலம் பெறும் உடல் குளிர்ச்சி அடையும் உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்கும்.
ஆமணக்கு விதை பருப்பை பதினைந்து எடுத்து பசும்பாலில் வேக வைத்து இதை தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் இரண்டொரு நாளில் இடுப்பு வலி மற்றும் கை கால் வலிகள் குணமாகும்.
ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சம அளவாக எடுத்து இதை சந்தனம் போல் அரைத்து ஒரு எலுமிச்சை அளவு காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும் கல்லீரல் வீக்கம் குறையும்
இந்த மருத்துவ முறையை கடைபிடிக்கும் பொழுது கட்டாயமாக உப்பு புளி காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யுடன் இதே அளவு இஞ்சி சாறு கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் தீரும்.
ஆமணக்கு இலை எருக்கு இலை ஊமத்தை இலை சீந்தில் இலை இவை நான்கையும் வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு வேகவைத்து இந்த இலைகளை ஒரு துணியில் வைத்து முடிந்து இதில் ஒத்தடம் கொடுத்து வந்தால் தீராத நாட்பட்ட மூட்டு வலிகள் ஓரே வாரத்தில் குணமாகும் அசையாத மூட்டுகளிலும் அசைவு ஏற்படும்.