தேவையான பொருட்கள் :-
தினை அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
ஓட்ஸ் - 30 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
*செய்முறை :-
தினை அரிசி, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுத்தம் பருப்பைத் தனியாகவும் ஊற வைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க வைக்கவும்.
மறுநாள் காலை, ஓட்ஸ், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை கொர கொரப்பாக அரைத்து, இட்லி மாவில் கலந்து, இட்லிகளாக வார்த்து, வேக வைத்து எடுக்கவும்.
இதற்கு, தக்காளி சட்னி ருசியாக இருக்கும்.
*பயன்கள்
ஓட்ஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு, தினை அரிசி ஒரு வரப்பிரசாதமாகும்.
இட்லி மாவைப் புளிக்கச் செய்வதன் மூலம், புரோபயாட்டிக்ஸ் உற்பத்தியாகும். இது, குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.