Breaking News :

Friday, January 03
.

2 நொடிகளில் சிறுநீர் கழித்தால் ஆபத்தா?


உலகில் நோயின்றி வாழ்பவர் எவரும் இல்லை என்று தான் சொல்லும் அளவுக்கு நோய்கள் பெருகி கிடக்கின்றன. இதற்கு காரணம் நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு தவறுகளே ஆகும்.

சிறுநீர் மற்றும் மலம் என்பது நம் உடலில் இருந்து தேவையற்ற கழுவுப் பொருட்களாக வெளியேற்றப்பட்டாலும், அதை வைத்து தான் ஒருவரது உடலில் உள்ள நோய் தொற்றுக்களின் தாக்கத்தை அறிந்துக் கொள்ள முடிகிறது.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் குறைந்தபட்சம் 7 நொடிகள் சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும், 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழித்தால், அதற்கு தொற்றுக்களின் பாதிப்புகள் காரணமாகும். ஒருவர் 7 முறை வரை ஒரு நாளைக்கு சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். ஆனால் அதை விட மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழித்தால், அது உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளின் அறிகுறியாகும்.

காலையில் எழுந்தவுடன் நாம் முதல் முறையாக கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர். சிறுநீர் கழிக்கும் போது, அது மிகவும் துர்நாற்றம் வீசினால், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம். ஒளிகுர்யா எனும் ஓர் நிலை, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றது.

தினமும் நாம் காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும். நீச்சல் குளத்தில் ஒருவர் குளிக்கும் போது, அவர்களின் கண்கள் சிவந்து இருக்கும். இதற்கு காரணம் குளோரின் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு உள்ளது என்று அர்த்தம்.

வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் சுத்தமாக உள்ளது என்றும் அவர்களின் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

வெளிறிய மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தால், அது அவர்களின் உடம்பில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளது என்று அர்த்தம்.

மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், அது அவர்களின் உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது என்று அர்த்தம்.

பழுப்பு நிறத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால், அது கல்லீரல் தொற்று மற்றும் அவர்களின் உடம்பில் பழைய ரத்தம் உள்ளது என்று அர்த்தம். தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது என்றும் சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தம்.

நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேற்றப்பட்டால், அது அவர்கள் தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் மற்றும் உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை தென்பட்டால் அது அவர்களுக்கு நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.