நம்முடைய உடல் பாகங்கள் அதிக உணர்திறன் கொண்டவை. இதில் தசைகளில் ஏற்படும் துடிப்பு ஒரு தன்னிச்சையான நிகழ்வாகும். சிலசமயம் உங்களால் கூட அதனை தடுக்க முடியாது. இந்த தசை துடிப்புகள் உங்களின் எதிர்காலத்தை அறிய உதவுகின்றன. இதையே அங்கத் துடிப்பு என்கிறோம்.
அங்கத் துடிப்பு அடிக்கடி நிகழ்வதில்லை. எப்போதாவது ஒரு முறை அல்லது சில நேரங்களில் துடிப்பதை உணர்த்திருப்போம். அப்படி அங்கத் துடிப்பு ஏற்பட்டால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்பதை பார்ப்போம்.
உச்சந்தலை - துன்பம் நீங்கும்.
உச்சந்தலை வலது பாகம் - அச்சம் உண்டாகும்.
உச்சந்தலை இடது பாகம் - பெருமை உண்டாகும்.
தலை - பெருமை ஏற்படும்.
தலையின் பின்பாகம் - பகை.
நெற்றியின் வலது பாகம் - நோய் நீங்கும்.
நெற்றியின் இடது பாகம் - நிறைந்த செல்வம் ஏற்படும்.
இரண்டு புருவம் - பெருமை உண்டாகும்.
வலது புருவம் - பெருமை உண்டாகும்.
இடது புருவம் - பெரிய பொல்லாங்கு பேச்சு.
கண்ணின் பின்பாகம் - பெரும் புகழ், செல்வம் உண்டாகும்.
வலது கண் இமை மேல் நோக்கி - வழக்கு தீரும்.
வலது கண் இமை கீழ் நோக்கி - கவலை, அழுகை.
இடது கண் மேல் இமை - செல்வம், சுக வாழ்க்கை.
இடது கண் இமை கீழ் நோக்கி - துணைவனுக்கு துன்பம்.
வலது கண் ழுழுவதும் - வருத்தம் உண்டாகும்.
இடது கண் - மிகுந்த பெருஞ்செல்வம்.
கன்னங்கள் - நல்ல செய்திகள் கிடைக்கும்.
உதடுகள் - புதிய நட்பு கிடைக்கும்.
வலது கண் - ஆசைகள் ஈடேறும்.
இடது கண் - இழுபறிகள் மறையும்.
கழுத்து - துன்பங்கள் நீங்கும்.
இடது புயப்புறம் - நல்ல மனைவி.
வயிறு - நாள்தோறும் நோய்.
வலதுபுற முதுகு - நோய் வந்து நீங்கும்.
இடதுபுற முதுகு - குடியிருந்த மனையை இழத்தல், நெடுந்தொலைவு செல்லுதல்.
முதுகு ழுழுவதும் - வருத்தம்.
இரண்டு கைப்பட்டைகள் - குற்றமுடையது.
வலது விலா - வருத்தம், கவலை.
இடது விலா - வீட்டை இழத்தல்.
வலது புயப்புறம் - வழக்கில் வெற்றி.
இடது புயம் - எதிர்பாராத செய்திகள் கிடைக்கும்.
வலது கண்டக்கை - உடைச் சிறப்பு.
இடது கண்டக்கை - இன்னல்கள் நீங்கும்.
வலது ழுழங்கை - தவப்பயன் கிடைக்கும்.
இடது ழுழங்கை - தனச்சேர்க்கை உண்டாகும்.
வலது முன்கை - பேறு பெருகும்.
இடது முன்கை - பிறரால் துன்பம்.
வலது உள்ளங்கை - இழிவு வரும்.
இடது உள்ளங்கை - லாபம் உண்டாகும்.
வலது கை பெருவிரல் - லாபம்.
வலது கை ஆள்காட்டி விரல் - நன்மை, செல்வம்.
வலது கை நடுவிரல் - நல்ல காரியம்.
வலது கை மோதிர விரல் - பெருமை.
வலது கை சிறுவிரல் - எதிர்பாராத செய்திகள் கிடைக்கும்.
வலது கை அடிபாகம் - சிறந்த காரியத்தால் செல்வம்.
இடது கை பெருவிரல் - இராஜநோக்கம், நிறைவான வாழ்க்கை.
இடது கை நடுவிரல் - வழக்கு உண்டாகும்.
இடது கை மோதிர விரல் - நன்மை பிறக்கும்.
இடது கை சிறுவிரல் - ஆரோக்கியம் மேம்படும்.
இடது கை - கவலை, இருந்த பதவியை இழத்தல்
வலது முலை - எதிர்பாராத செய்திகள் கிடைக்கும்.
இடது முலை - சுக வாழ்க்கை.
வலது புறங்கை - வழக்கு உண்டாகும்.
இடது புறங்கை - துன்பம் வரும்.
வலது கைப்பட்டை - புதிய ஆடை சேர்க்கை உண்டாகும்.
மூக்கின் வலது பாகம் - நற்பாக்கியம் உண்டாகும்.
மூக்கின் இடது பாகம் - செல்வம் பெருகும்.
நெஞ்சு - துன்பம் வரும்.
தொப்புள் - மிகுந்த கவலை.
மேல் உதடு - நல்ல செய்தி கிடைக்கும்.
கீழ் உதடு - உணவு கிடைக்கும்.
இடது விலாவின் வலது பாகம் - பொருள் சேரும், பயணம் ஏற்படும்.
இடது விலாவின் இருபாகங்கள் - நோய் தீரும்.
இடை - வேள்வி புரிதல் மிகப்பேறு.
ஆண்குறி - தொலைவில் உள்ளவரால் கவலை.
இரண்டு விதைகள் - வழக்கு உண்டாகும்.
வலது விதை - யானை, குதிரை ஏற்றம்,
இடது விதை - நோய் நீங்கும்.
வலது தொடை- முறையற்ற வகையில் வழக்கு வெற்றி.
இடது தொடை - நல்ல செய்தி கிடைக்கும்.
இரு தொடைகள் - செம்பொன் உண்டாகும்.
இடது ழுழந்தாள் - உலகை ஆளுதல்.
வலது கணைக்கால் - செல்வம் உண்டாகும்.
வலது புறவடி - நோய்.
இடது புறவடி - வழக்கில் வெற்றி.
வலது உள்ளங்கால் - நோய்.
இடது உள்ளங்கால் - தேசப் பயணம்.
இரண்டு உள்ளங்கால்கள் - பல்லக்கில் ஏறுதல்.
வலது ழுழந்தாள் - கோபம்.
வலது கண்டைக்கால் - அடிமை.
இடது கண்டைக்கால் - பெருநோய், கவலை.
இரண்டு கணைக்கால்கள் - நடுக்கம், ஓட்டம்.
கால்விரல்கள் பத்து - நன்மைகள், திருமகள் சேர்க்கை, சிறப்புமிக்க வாழ்க்கை.
நன்றி; கு பண்பரசு