ராசிக்கு 6-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும் குருபகவான் ராசிக்கு 9-ம் இடமான பாகிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் தடையின்றி நடக்கும் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் பண சேமிப்புகள் உண்டாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.
10-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் காரிய தடைகள் விலகும்.
புதன் 11-ம் தேதிக்கு பிறகு 6-ம் இடத்துக்கு செல்வதால் நன்மைகளை காணலாம் புத்திகூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் பிப்ரவரி 13-ம் தேதி சூரியன்
6-ம் இடத்தில் புதன் சனியுடன் இணைந்து நற்பலன்களை வழங்குவார் அரசியல் செல்வாக்கு கூடும் புதிய நபர்களால் நன்மைகள் உண்டாகும்.
புதிய பொலிவும் தேஜஸும் கூடும்.
7-ம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பெண்களால் அவப்பெயர்கள் உண்டாகும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் வாகனத்தில் மெதுவாக செல்லவும் ராசிக்குள் கேதுவும் 7-ம் இடத்தில் ராகுவும் இருப்பதால் மருத்துவ விரைவு செலவுகள் உண்டாகும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.
பிப்ரவரி 4,5,6, சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன் கிழமைகளில் லட்சுமிநரசிம்மர் அல்லது யோகநரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.