Breaking News :

Saturday, May 18
.

12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024


கடந்த ஓர் ஆண்டுகளாக மேஷத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான் வருகின்ற சித்திரை மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை (01.05.2024) வாக்கிய பஞ்சாங்க படி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மேஷ ராசி

மேஷ ராசி நாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான குரு பகவான் இந்த ராசிக்கு லக்கின யோகரான 9ஆம் இடம் மற்றும் விரய ஸ்தானமான 12 ஆம் இட  அதிபதியாவார்.

கடந்த ஓராண்டுகளாக ஜென்மத்தில் இருந்த இந்த குரு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு கடுமையான கஷ்டங்களை தந்து கொண்டிருந்தது. இந்த குரு பெயர்ச்சி  மேஷ ராசிக்கு ஒரு மிகச் சிறந்த பெயர்ச்சியாக விளங்குகிறது .ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து குரு பகவான் ஆறாம் இடத்தை பார்வை செய்வதால்ஸ இதுவரை உங்களுக்கு இருந்த கடன் கட்டுப்படும். எதனால் நீங்காத தீர முடியாத நோய்கள் தீரும். எதிரி உங்களுடன் சமாதானத்துக்கு வருவார். தீர்க்க முடியாத பகை பிரச்சினைகள் இந்த பெயர்ச்சி மூலம் உங்களுக்கு தீரும்.

ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுடைய எட்டாம் இடத்தை பார்வை செய்வதால் வம்பு ,சண்டை வழக்கு கோர்ட் சம்பந்தமான விஷயங்கள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்து செல்ல முடியாமல் இருந்து கொண்டு இருந்தவர்கள் இந்த பெயர்ச்சி மூலமாக நீங்கள் நிச்சயமாக வெளிநாடு சென்று பொருளை தேடக் கூடிய யோகம் உண்டாகும்.

இதுவரை நீங்கள் மேற்கொண்ட தொழிலில் நஷ்டத்தை சம்பாதித்துக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த குருபகவான் பத்தாம் இடத்தை ஒன்பதாவது பார்வையால் பார்வை செய்வது மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து தொழிலும் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் மேற்கொண்ட தொழில் மூலமாக நல்ல லாபமும்  மற்றும் அதிர்ஷ்டமும் பெறுவீர்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருபகவான் அஷ்டமாதிபதியாகவும் மற்றும் லாபத்தை தரக்கூடிய லாவாதிபதியாகவும் செயல்படுகிறார்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஓராண்டு முழுவதும் ஜென்மத்தில் குரு பகவான் வாசம் செய்வதால் மிகப்பெரிய நன்மைகளை நீங்கள் அடைந்து விடுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் தனது  ஐந்தாம் பார்வை மூலம்  பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்வதால்  பிள்ளைகளால் உண்டான பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும் . விட்டு பிரிந்து சென்ற பிள்ளைகள் உங்களை நாடி வருவார்கள்.கனபூர்வீக சொத்துக்கள் மீது ஏற்பட்ட வழக்குகள் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் .இதுவரை பூர்வீக சொத்து கிடைக்காமல் இருப்பவர்களுக்கு கிடைக்கும். புத்திர பாக்கியம் நீண்ட நாளாக காத்திருக்கக்கூடிய அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 உங்கள் ராசியில் இருந்து சம  சப்தமாக ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இந்த நாள் திருமணத்திற்காக காத்திருக்கக்கூடிய தம்பதிகளுக்கு நல்ல வரன் அமையும்.இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வியாழன் நோக்கம் உண்டாகி திருமணம் பாக்கியம் உண்டாகும். நல்ல மனைவி / கணவன் உங்களுக்கு வாய்ப்பார்.

இதுவரை கணவன்- மனைவிக்கு இடையே நிலவி  வந்த உட்பூசல்களும், பிரச்சனைகளும் விலகி ஒரு அன்யோன்யமான உறவை நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஏற்பட்ட பகை விலகும்.

உங்கள் ராசிக்கு பாக்கிய  ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை குரு பார்வை செய்தால் நல்ல பாக்கியம் வருமானம் உண்டாகும்.

உங்களுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட பகை விலகும் .தந்தை மூலம் ஆதாயம் நடக்கும் .உங்களை விட்டு பிரிந்து இருந்த தந்தை மீண்டும் வந்து சேருவார். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நல்ல உயர் கல்வி உங்களுக்கு வாய்க்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் அதிபதியாகவும் மற்றும் ஜீவனஸ்தானதிபதியான பத்தாம் இட அதிபதியாகவும் செயல்படுகிறார்.

உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த உங்களுக்கு ஒரு நிம்மதியான தூக்கம் உண்டாகும். உங்களுக்கு இதுவரை விரைய செலவுகளாக கெட்ட செலவாக செய்து வந்த நீங்கள் இனிமேல் சுப செலவை மேற்கொள்வீர்கள் .12ஆம் இடத்தில் இருந்து சுகஸ்தானமான நாலாம் இடத்தை பார்வை செய்வதால் நல்ல சுகம் உண்டாகும் .கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம்  மற்றும் தாய் மூலமாக சுகம் முதலில் உருவாகும் நீண்ட நாள் நோயிலிருந்த உங்களது அம்மா இந்த நோயிலிருந்து விடுபடக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும். உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் இடையே இதை வந்த பிரச்சினைகள் நீங்கி நல்ல ஒரு சமூகமான உறவு உண்டாகும்.

உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்தை பார்வை  செய்வதால்

எட்டு மற்றும் பன்னிரண்டாம் ஆம் இடம் இந்த குரு பெயர்ச்சி மூலம் சுப தன்மை அடைவதால் நிச்சயமாக வெளிநாடு முயற்சி செய்து கொண்டிருக்க கூடிய இளைஞர்கள் வெளிநாடு சென்று நல்ல பொருளீட்டி வீடு ,வாசல், மண்ணு மனை அமைப்பீர்கள்.

கடக ராசி

உங்கள் ராசிநாதன் சந்திரனுக்கு நட்பு கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் சத்ரு  ஸ்தானமான ஆறாம் இடம் மற்றும் லக்கன யோகரான பாக்கியஸ்தானமான ஒன்பதாம் இட அதிபதியாவார்.

கடந்த ஓராண்டுகளாக ஜீவனஸ்தானமான 10-ஆம் இடத்தில் நட்பு நிலையில் இருந்து கொண்டு நல்ல பலனை தந்த குரு பகவான் மீண்டும் 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து பகை வீடு ஏறி இருப்பதால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனைத் தரக்கூடிய பெயர்ச்சியாக அமைகிறது.

பதினோராம் இடத்தில் உள்ள குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் நீங்கும். கீர்த்தி புகழ் உண்டாகும் சகோதர உறவுகளிடையே  நிலவி வந்த இன்னல்கள் மற்றும் உட்பூசல்கள் நீங்கும்.சகோதர உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.

 உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தை தனது ஏழாம் பார்வையால் குரு பகவான் பார்வை செய்கிறார். இதனால் புத்திர தடை விலகி குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாளாக உங்களுக்கு கைக்கு வந்து சேராத அப்பா வழி சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். பூர்விக இடத்தில் புகழும் பெருமை அடைவீர்கள். பூர்வீக இடத்தை விட்டு விலகி இருந்த நீங்கள் பூர்வீக இடம் நோக்கி பெயர்ச்சி அடையக்கூடிய வாய்ப்பை தரும். குழந்தைகளால் பெரும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைவீர்கள்.

தனது ஒன்பதாவது பார்வையால் ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் மனைவி/ கணவன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்களை விட்டு கோபமாக பிரிந்து சென்ற மனைவி உங்களை நாடி வருவார். மனைவி வழி சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களுக்கும் உங்களுக்கும் இருந்த பிணக்கு விலகி நண்பருடைய ஆதரவை பெறுவீர்கள் நல்ல சமூக மதிப்பு உங்களுக்கு உருவாகும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிநாதன் சூரிய பகவானுக்கு நட்பு கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் லக்கன யோகரான பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடு அதிபதியாகவும் மற்றும் அஷ்டம ஸ்தான அதிபதியாகவும் விளங்குகிறார்.
 
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகமான செவ்வாயில் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்வை செய்த குரு பகவான் மிகுந்த நல்ல பலனை தந்து கொண்டு இருந்தார்‌ இப்பொழுது உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ரிஷபத்தில் பகைவீடு ஏறி இருப்பதால் ஓரளவு சுமாரான பலனைத் தரக்கூடிய பெயர்ச்சியாக உங்களுக்கு அமைகிறது.

உங்க ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களுடைய தன ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் உங்களுக்கு தன் வரவு உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழக்கூடிய வாய்ப்பை பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தை குரு பகவான் சம சப்தமாக பார்வை செய்வதால் தன் சுகம், தாய் சுகம் ,கல்வியால்  சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவை உண்டாகும்.

தனது ஒன்பதாவது பார்வையால் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் உங்களுக்கும் எதிரிக்கும் இடையே வந்த பிணக்கு விலகும் .கடன் பிரச்சினைகள் தீரும் .நீண்ட நாள் தீராமல் இருந்த நோய்  பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடம் அதிபதியாகவும் மற்றும் வாழ்க்கை துணை தரக்கூடிய களத்திர ஸ்தான அதிபதியாகவும் குரு பகவான் செயல் படுகிறார்.

 உங்கள் ராசிக்கு  எட்டாம் இடத்தில் மறைவிட ஸ்தானத்தில் இருந்து மறைந்து இருந்த குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு  பெயர்ச்சி அடைவதால் தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியை பார்வை செய்வதால் மிகுந்த யோகத்தை இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் அடையப் போகிறீர்கள்.

உங்களுக்கு நல்ல அந்தஸ்து புகழ் கிடைக்க இருக்கிறது இதுவரை தடைபட்ட அனைத்து செயல்களும் இனி சிறப்பாக நடைபெறும்.
 தனது மூன்று சம சப்தம பார்வையால் மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால்  சகோதரர் வழியாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். சகோதரர்கள் மூலமாக அன்பும் ,ஆதரவும் கிடைக்கும். கீர்த்தி ,புகழ் ,அந்தஸ்து கிடைக்கும் உங்களுக்கு.

தனது ஒன்பதாவது பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்தால் பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக மனையில் குடியேறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்த பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும் இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும் பிள்ளைகளால் ஆதரவு பெருகும் பிள்ளைகள் நன்றாக படிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

துலாம் ராசி

உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஆறுக்குடைய அவ யோக கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மறைவது மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கக்கூடிய அமைப்பாகும்.

குரு பகவான் எட்டாம் இடத்தில் இருந்து கொண்டு தனது ஐந்தாம் பார்வையார் 12ஆம் இடத்தை பார்வை செய்வது வெளிநாடு செல்லக்கூடிய யோகம் வெளிநாட்டில் இருந்து பணவரவு, சுப செலவு செய்யக்கூடிய அமைப்பு போன்றவை உண்டாகும்.
 தனது சம சப்தம பார்வையால் இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் தான வரவு உண்டாகும் கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய மனிதராக மாறுவீர்கள் கல்வியில் உயர்வடைவீர்கள்  பொருள் தேடும் பொருட்டு குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த நீங்கள் குடும்பத்திற்கு வந்து  சேரக்கூடிய அமைப்பை உண்டாக்கும்.

தனது ராசிக்கு  எட்டாம் இடத்தில் இருந்து கொண்டு தனது ஒன்பதாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவை உருவாகும் கல்வியில் உயர்வடைவீர்கள்.

விருச்சக ராசி

உங்கள் ராசிக்கு தன‌ மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு மிகுந்த யோகத்தை இந்த பெயர்ச்சி உங்களுக்கு வழங்க இருக்கிறது .கடந்த ஓர் ஆண்டுகளாக மறைந்திருந்து நல்ல பலனை தராத நிலையில் உள்ள இந்த குருபகவான் தற்பொழுது உங்களுக்கு ஏழாம் இடத்திற்கு வந்து மிகுந்த யோகத்தை அள்ளித்தர இருக்கிறார்.  இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து மற்றும் கௌரவம் போன்றவற்றில் உயர்வடையச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தை அதாவது லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்வை செய்ய  இருப்பதால் தொழில் வரவு புதிய தொழில் தொடக்கம் இதுவரை தொழிலில் பிரச்சனைகளை சந்தித்த நீங்கள் அந்த தொழில் மூலம் லாபத்தை உயர்வை அடையக்கூடிய நேரமாகும்.

 உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை தனது ஒன்பதாவது பார்வையால் பார்வை செய்வதால் சகோதரர் வழியாக நிலவி வந்த பிரச்சினை விலகும்.சகோதரர்களால் ஆதரவு பெருகும். கீர்த்தி, புகழ் உண்டாகும்.

தனுசு ராசி

உங்கள் ராசி அதிபதியாகவும் மற்றும் சுக ஸ்தான அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் மறைவதால் பெரிய அளவுக்கு நன்மையை இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு தரப் போவதில்லை.

குருபகவான் தனது ஐந்தாவது பார்வையால் உங்கள் ஜீவனஸ்தானத்தை பார்வை செய்வதால் தொழிலில் முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும் .புதிய தொழில் தொடங்குவார்கள் தொடங்கலாம்.

தனது ஒன்பதாவது பார்வையா தனஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் தன வர உண்டாகும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சியும் பெருகும் .கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கல்வியில் உயிரடைவார்கள்.

மகர ராசி

உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் 12 வது அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு திரிகோணத்தில் அமர்ந்து உங்கள் ராசியை தனது ஒன்பதாம் பார்வையால் பார்வை செய்வதால் மிகப்பெரிய ஏற்றங்களை நீங்கள் அடைவீர்கள் உங்களுக்கு கீர்த்தி, புகழ், அந்தஸ்து பெருகும் .நல்ல உடல்  ஆரோக்கியம் உண்டாகும்.

தனது ஐந்தாம் பார்வையால் பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடத்தை பார்வை செய்தால் உங்கள் தந்தைக்கு நல்ல முன்னேற்றங்கள் உருவாகும் தந்தை மூலமாக ஆதரவு கிடைக்கும் இதுவரை பிரிந்து இருந்த தந்தை உங்களிடம் வந்து சேர்வார்கள் உயர்நிலை ,மேல்நிலைக் கல்வியில் உயர்வடைவீர்கள். தனது சம சப்தம ஏழாம் இடப்பார்வையால் தனது லாப ஸ்தானத்தை பார்வை  செய்வதால் தான் மேற்கொண்ட தொழிலில் மிகுந்த லாபத்தையும் உயர்வையும் அடைவீர்கள்.

கும்பம் ராசி

 உங்கள் ராசிக்கு தன மற்றும் லாப அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் நின்று 8 12ஆம் இடத்தை தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்வை செய்ய இருப்பதால் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு செல்ல வேண்டும் ஆசையில் பலவாறு முயற்சி செய்து தோல்வி அடைந்திருப்பீர்கள் நிச்சயமாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களை தேடி வரும்.
உங்கள் வீட்டில் சுப செலவுகள் உங்களைத் தேடி வரும். ஆயுள் நீடிக்கும்.

தனது சம சப்தம பார்வையால் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தையும் பார்வை செய்வதால் தொழிலில் முன்னேற்ற அடைவீர்கள் புதிய தொழில் தொடங்கி அதன் மூலம் பெரிய லாபத்தை அடைவீர்கள்.

மீன ராசி

உங்கள் ராசிக்கு ராசி அதிபதியாகவும் மற்றும் ஜீவன அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சகோதரர்  மூலம் ஆதரவு பெருகும் .கீர்த்தி, புகழ், அந்தஸ்து அடைவீர்கள், தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இதுவரை உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே இருந்த பிணக்குகள் பிரச்சனைகள் நீங்கும். திருமணத்திற்காக காத்திருக்கக்கூடிய நபர்களுக்கு நல்ல மணம் அமையும் .

குரு பகவான் தனது சம சப்தம பார்வையால் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்வதால் தந்தை மூலமாக ஆதரவு பெருகும்.தொழில் வருமானம் உண்டாகும் .மேல்நிலைக் கல்வியில் உயர்வு .நல்ல பாக்கியங்களையும் மற்றும் சுகங்களையும் அடையக்கூடிய யோகம் போன்றவை உருவாகும்.

தனது ஒன்பதாவது பார்வையா லாப ஸ்தானத்தை பார்வை செய்வதால் தொழில் மூலம் ம் மிகுந்த லாபத்தையும் அடைவீர்கள் . இதுவரை மறு  திருமணத்திற்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மறு திருமணம் ஆகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.


நன்றி ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  (7402570899)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.