2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம் பொதுவாகவே கும்ப ராசிக்காரர்கள் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் கும்ப ராசிக்காரர்கள் கல்வியில் சிறந்து விளங்க கூடியவர்கள் ஊக்கமுடையவர்கள் தெய்வ வழிபாடுகள் நாட்டமுடையவர்கள் அலட்டிக் கொள்ளாது எதையும் வெளிப்படுத்தாத அல்லது தன்னை வெளிகாட்டிக் கொள்ளாத இயல்பு உடையவர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வார்கள் சலிப்பு இல்லாத போக்கும் இவரிடம் காணப்படும் இயல்பானவர்கள் திடமான மன உறுதி உடையவர்கள் தான் நினைத்ததை சாதிக்கும் திறன் பெற்றவர்கள் கும்பராசிகள் உண்மை பேசுவதை குறிக்கோளாக கொண்டவர்கள் தவறு செய்பவர்கறை கண்டால் தயவு தாட்சனம் பார்க்கமல் கண்டிப்பார்கள் அவர்களை துல்லியமாக எடைபோட்டு வைத்திருப்பார்கள். சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமாக அளிப்பதில் வல்லமை பெற்றவர்கள்.
கடந்த வருடம் வருட கோள்களால் எந்த நன்மையான பலன்களும் உங்கள் ராசிக்கு கிடைக்கவில்லை இந்த வருடம் 2025-ல் வரக்கூடிய குரு பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 3, மற்றும் 4-ம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியால் ராசிக்கு 5-ம் ஸ்தானத்துக்கு செல்கிறார் ஐந்தாம் ஸ்தானம் என்பது பூரவ புண்ணிய ஸ்தானமாக கருதுவதால் தன வரவுகள் நன்றாக இருக்கும் பண சேமிப்பில் ஆர்வம் பிறக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் புதிய சொத்து மற்றும் வீடு அமையும் யோகம் உண்டு. புதிய வாகனங்கள் எளிதில் வாங்க முடியும் புது வீடு கட்ட வங்கி கடன் எளிதில் கிடைக்கும் நினைத்தை காரியம் யாவும் நடக்கும் பிள்ளைகளால் உதவிகளும் ஆதரவும் கிடைக்கும் தந்தை மகனுக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் ஒற்றுமை மேலோங்கும்.
மேற்படிப்பு படிக்கும் யோகமும் உண்டு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
சனிபகவான் ஜென்மத்தில் அமர்ந்து ஏழரைச்சனியாக வலம்
வருகிறார் இதனால் மனக்குழப்பங்கள் விரையங்கள் உண்டாகி இருக்கும் கொடுத்த பணம் ஒருவரிடம் மாட்டிக் கொள்வது தேவையில்லாத கடன் சுமைகளில் நாம் சிக்கிக் கொள்வது போன்ற நிகழ்வுகள் நடக்கும் நம்பிக்கை துரோகங்கள் வலிகள் வேதனைகள் அனுபவித்து இருப்பீர்கள்
வரக்கூடிய 29-03-2025
சனி பெயர்ச்சியில் ஜென்மத்தில் அம்ர்ந்த சனிபகவான் இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் இரண்டாம் இடம் என்பதும் பெரிய நன்மைகளை வழங்காத இடமாக கருதப்படுகிறது இதுவும் பெரிய நன்மைகளை வழங்காது இருந்தாலும் இரண்டாம் இடம் என்பது தன ஸ்தானமாக கருதப்படுவதால்
திடீர் பண வரவுகள் வரக்கூடும் எதிர்மறையான ஆற்றலும் சக்தியும் பிறக்கும் நினைத்தது யாவும் நடக்கும்.
இருந்தாலும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் மிகுந்த கவனம் செலுத்துவும்.
வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும்.பூர்வீகத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும்.
ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்ந்த ராகுபகவான் 18 05 2025 வரக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராகு ராசிக்குள் பிரவேசிக்கிறார் ராசிக்குள் அமர்ந்த ராகு பகவான் பல மன குழப்பங்களை உண்டு பண்ணுவார் வேலையில் திருப்தி இருக்காது வேலைக்கு போகும் எண்ணங்கள் இருக்காது இருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்ச்சி செய்பவார்கள் வேலைக்கு சென்றாலும் பணிச்சுமை அதிகமாக காணப்படும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் சில நஷ்டங்களை உண்டு பண்ணும் உடல் உபாதைகளும் உண்டாகும் இந்த ஆண்டும் வழக்கம் போலவே ராகுவால் உங்கள் ராசிக்கு நற்பலன்கள் கிடைக்காது.
எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்த
கேதுபகவான் வரக்கூடிய
ராகு+ கேது பெயர்ச்சியில் ராசிக்கு 7-ம் இடத்துக்கு செல்கிறார் இதனால் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத விவாகரங்களும் வாக்குவாதங்களும் உருவாகும். உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள் குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு நேரத்துக்கு சாப்பிடாமல் நோய்களை உருவாக்கிக் கொள்வார்கள் இவர்களை ஆதித்த பாதிக்க போக்கினால் மற்றவர்களிடம் விரோதம் ஏற்படும் வாழ்க்கை துணையை அதிகாரம் செய்வார்கள் ஈகோ பார்ப்பார்கள்.
பெண்களுக்கு!
குரு பெயர்ச்சி வரை சற்று அமைதியாக இருக்கவும் குரு பெயர்ச்சியால் நன்மைகள் நடக்கும் குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குரு பெயர்ச்சி வரை பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
குருபெயர்ச்சியால் நன்மைகளை காணலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு!
பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணிசுமை காரணமாக நாம் வேலையை விடும் சூழல் கூட உருவாகும் வேலையை விட்டால் வேறு வேலை கிடைக்க போராட வேண்டி வரும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நன்மையான பலன்களை காணலாம் மன அமைதியும் சந்தோஷமும் பிறக்கும்.
மாணவர்களுக்கு!
ஞாபக மறதி அதிகமாக காணப்படும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும் அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்த வேளையில் படிக்கத் தொடங்குங்கள் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் கல்விக்கடவுள்களான ஹயக்ரீவர் வழிபாடும் சரஸ்வதி வழிபாடும் செய்து வாருங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெண்பூசணியில் விளக்கெண்ணெயில் தீபமேற்றி வாருங்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாடும் சிறப்பை தரும்.
இந்த வருடத்தில் வரக்கூடிய பௌர்ணமி அல்லது அமாவாசை திதி அன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.