Breaking News :

Sunday, February 23
.

மேஷம் - ஆங்கிலப் புத்தாண்டு 2025 - ராசி பலன்கள் பரிகாரங்கள்


இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு பூராட நட்சத்திரத்தில் சுக்கரின் சாரம் பெற்று இருப்பதால் சுபத்துவம் பெற்ற ஆண்டாக கருதப்படுகிறது பொதுவாகவே மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்சி மிக்கவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒளியும் மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்.

மேஷ ராசிக்காரர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். 12 ராசிகளில் முதல் ராசியாக வருவதால் எதிலும் முதன்மைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும். பெரும்பாலும் இவர்கள் கோபக்காரர்களாக, அநீதியைக் கண்டு பொங்குபவர்களாக இருப்பார்கள்.

எதிலும் எவரையும் சார்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், கூட்டமாக நண்பர்கள்.  உறவினர்களோடிருப்பதை விரும்புவார்கள்.

எந்தச் செயலிலும் துடிப்பும் வேகமும் மிக்கவர்களாக இருப்பார்கள். எவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு அவர்கள் தப்பித்தவறி துரோகம் இழைத்துவிட்டால், அதன் பிறகு அவர்களிருக்கும் பக்கம் திரும்பிகூடப் பார்க்க மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்களின் பலவீனம் என்று பார்த்தால் இவர்களின் கோபம்தான். தவற்றை உணர்ந்துவிட்டால் வயதில் சிறியவராக இருந்தாலும் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டார்கள்.

இந்த வருடம் 2025-ம் ஆண்டு மிக முக்கியமாக நான்கு வருட கோள்களான சனி.குரு.ராகு+கேது ஆகிய கோள்கள் பெயர்ச்சி ஆகின்றன.

மார்ச் மாதம் 29ஆம் தேதி சனி பகவான் 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்துக்கு வருகிறார் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து பல நன்மைகளை வழங்கி வந்த சனி பகவான் தற்சமயம் விரைய ஸ்தானத்துக்கு வருகிறார் விரைய ஸ்தானம் என்பது பெரிய விரைவுகளை தர மாட்டார் மருத்துவ செலவுகள் வரக்கூடும் உடல்நல குறைபாடுகள் உண்டாகும் அலைச்சல் அதிகமாக காணப்படும் வெளியூர் பயணங்களால் உடல் உபாதைகள் உண்டாகும்.

குடும்பத்துடன் பொழுதை கழிக்க நேரம் இருக்காது வேலை வேலை என சுற்றுவதால் எதிலும் நாட்டம் இருக்காது திருப்தியை தராது எந்திரத்தனமான வாழ்க்கையாக மாறும் சொத்து பிரச்சனைகள் கோர்ட் கேஸ் என அலைகழிக்கப்படுவீர்கள்.

அசுப விரையங்கை தவிற்க்க பணம் கையிருப்பு இருந்தால் சுப விரையங்களாக மாற்றலாம் வீடு வாங்குவது மனை நிலங்களில் முதலீடு செய்வது ஆபரண நகை சேர்க்கை குடும்பத்தில் சுப நிகழ்வுகள் திருமணங்கள் நடத்தப்படுவதால் அசுப விரையங்கள் தவிர்க்கப்படும்.

இரண்டாம் வீட்டில் அமர்ந்து யோக நிலைகளை வழங்கி வந்த குரு பகவான் தற்சமயம் மூன்றாம் இடத்துக்கு செல்கிறார். குருபகவான் சுபத்துவம் பெற்ற கோளாக கருதப்படுவதால் பெரிய பாதிப்புகளை வழங்க மாட்டார் தேவையில்லாத ஆடம்பர பொருட்களை வாங்கி கடன் சுமையை ஏற்றிக்கொள்ளாதீர்கள் வரவைக்கும் மீறிய செலவுகள் செய்யாதீர்கள் கணவன் மனைவிக்குள் ஈகோ தலை தூக்கும் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் விட்டுக் கொடுத்துப் போவதால் நன்மைகளை காணலாம் குடும்ப உறவுமுறைக்குள் தேவையில்லாத பிணக்குகள் உண்டாகும் மன உளைச்சலும் சங்கடங்கள் வரக்கூடும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துகள் போடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.

மே மாதம் 18ஆம் தேதி ராகு+ கேது பெயர்ச்சியில் ராகு பகவான் 12ம் இடத்திலிருந்து 11ம் இடமான லாபஸ்தானத்துக்கு வருகிறார் இவ்வருடம் ராகு பகவன் சற்று பலத்துடன் காணப்படுகிறார் கடந்த வருடம் சனி பகவான் கொடுத்த நன்மைகளை இவ்வருடம் ராகுபகவான் கொடுப்பார்.

வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும் வெளிநாடு தொடர்புடைய வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் பங்குச்சந்தை டிரேடிங் மூலமாக ஆதாயம் காணலாம் அலோபதி மருத்துவம் மெடிக்கல் ஷாப் மருத்துவ உபகரண வியாபாரங்கள் சினிமா தொழில் புகைப்படத்தொழில் மிகுந்த லாபத்தை தரும். தீய கோள்களான ராகு +கேது சனிபகவான். சூரியன். செவ்வாய்.போன்ற கோள்கள் 3,6,10,11. இடங்களை உபஜெய ஸ்தானங்களாக கருதப்படுகிறது அவ்வகையில் ராகு 11ஆம் இடத்தில் அமர்வது சிறப்பே.
 
ராகு சாய கிரகமாக கருதப்படுவதால். எதிர்மறையாக தன வரவுகள் உண்டாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும் பண தேவைகள் பூர்த்தியாகும்.

தேக ஆரோக்கியம் காணப்படும். மருத்துவ விரைய செலவுகள் குறையும். 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளை வழங்கி வந்த  கேதுபகவான் இவருடம் 5ம் இடத்துக்கு பின்னோக்கி வருகிறார் ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாக கருதப்படுவதால், த்திரர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் தொல்லைகள் நஷ்டங்களும் உண்டாகும் திருமணங்கள் குழந்தை பாக்கியம் தள்ளிபோக கூடும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி கோயில் தலங்களுக்கு சென்று வருவதால் சுப செலவுகள் உண்டாகும்.

மறைமுகமான எதிர்ப்புகள் உண்டாகும் தொழில் செய்யும் இடங்களில் தேவையின்றி யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இருக்கும்.
யாரிடமும் முன் கோபத்தை காட்டாதீர்கள்.

பெண்களுக்கு!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நல்ல பெயரும் சம்பள உயரும் கிடைக்கும் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சுபச் செலவுகள் செய்வது நகை பணம் சேமிப்பில் ஆர்வம் காட்டுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு!
வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்
வெளியூர் பயணங்களால் உடல் உபாதைகள் தோன்றும்.
வேலை மாற்றங்கள் எதுவும் செய்யாதீர்கள்.

வியாபாரிகள் தொழில்களுக்காக புதிய முதலீடுகளும் புதிய கிளைகளும் தொடங்க வேண்டாம்
வரககூடிய வருமானம் வரும்.

மாணவர்களுக்கு!
படிப்பில் மந்தநிலை காணப்படும்.
வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எளிதாக வழி பிறக்கும்.
பெற்றோர்கள் பேச்சை கேட்டு நடக்கவும்..

பரிகாரம்!
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள் இவ் வருடத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதி அன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.