நாம் வீட்டில் மற்றும் #பூஜை அறையில் செய்யக்கூடிய சில தவறுகள் நமக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. வீட்டின் பூஜை அறை என்பது நமக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அறையாகவும் இருக்கிறது.
நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்சு திரி வைத்திருந்தால் மிகவும் நன்மையான விஷயம் தான். பஞ்சுத் திரியால் தீபம் ஏற்றினால் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். ஆனால் பஞ்சு திரியை திங்கள்கிழமை அன்று கைகளால் தொடக் கூடாது என்பது சாஸ்திர நியதி
தாமரைத்தண்டு திரி அல்லது வாழைத்தண்டு திரியால் தீபம் ஏற்றலாம்.
நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது வீட்டின் வாசலில் கோலம் போட்டு விட்டு, விளக்கு ஏற்றி விட்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீடு தான் முதல் கோவில் என்பதை மறந்து விடாதீர்கள்.
வீட்டில் சாமி படத்திற்கு நிவேதனம் வைக்கும் பொழுது, எச்சில் பட்ட பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்கென்று தனியாக ஒரு பாத்திரத்தை வைத்திருப்பது சிறந்தது. வாழை இலையை வைத்து அதில் நிவேதனத்தை படைப்பது முறையாகும்.
சுவாமி படங்களுக்கு சாற்றப்படும் பூக்களை உலரும் வரை அப்படியே விட்டுவிடக் கூடாது. அது போல் காய்வதற்கு முன்பே எடுத்து விடவும் கூடாது. மலர்கள் காயும் முன்பு எடுப்பதும், காய்ந்து சருகாகும் வரை படங்களில் விட்டு வைப்பதும் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
வீட்டில் வழிபடும் விக்ரகங்கள் அரை அடிக்கும் கீழாக இருக்க வேண்டும். சிலை பெரிதாக இருந்தால் மூன்று கால பூஜைகளும் நெய்வேதியமும் படைக்க வேண்டும் ஆச்சாரமாக இருக்க வேண்டும்.
கோயில்களில் சாமிக்கு சாற்றிய மாலையை வண்டி வாகனங்களுக்கு அணியக்கூடாது பூக்கள் உதிர்ந்து கீழே விழுவதால் கால்களில் மிதிபடும் ஆடு மாடுகள் தின்று விடும் இது பாபமான செயலாகும்.
அப்படி பெறப்படும் மாலைகள் நிர்மூல்யம் என செல்லப்படுகிறது.