Breaking News :

Tuesday, April 15
.

பாபங்களும், சாபங்களும் தீர சங்கல்ப ஸ்நானம்


இந்தியாவில் நதிகள் ஏராளமாக உள்ளன. அதில் ஏழு நதிகள் மிகவும் முக்கியமானவை. கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகியவை ஆகும். இதிலும் கூட கங்கைக்குத்தான் முதல் இடம் கிடைக்கிறது. கங்கையில் குளித்தால் எல்லா பாவங்களும் தீரும் என்று அனைத்து சாஸ்த்திரங்களும் கூறுகின்றன. இந்து மத சம்பிரதாயப்படி, ஒவ்வொரு இந்துவும், வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கையில் ஸ்நானம் செய்தால் நல்லது.

 

கங்கா ஜலம் அதாவது கங்கை நீர் பல வருடங்கள் கெடாமல் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒரு குடுவையில் பத்து வருடங்கள் வைத்திருந்தாலும் எந்தவிதமான Contamination ஆவது இல்லை. இதை ஆங்கிலேய விஞ்ஞானிகளே ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார்கள்.

 

கங்கையில் குளித்தால் நம்முடைய பாவங்கள் தீரும் என்பது அனைவருக்கும் தெரியும் அதே சமயம் நமக்கு இந்த பாவங்கள்தீர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதற்கு என்று ஒரு பெரிய சங்கல்ப மந்திரம் உண்டு. அதாவது இதற்கு, கங்கா ஸ்நான மகா சங்கல்பம் என்று பெயர். இந்த சங்கல்பத்தில் நாம் நம் முன் பிறவிகளிலோ, இந்த பிறவியிலோ, நாம் செய்த அனைத்து விதமான பாவங்கள், நமக்கு ஏற்பட்ட சாபங்கள், தோங்கள், பிதுர் சாபங்கள், திருஷ்டிகள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டுவதே ஆகும். இந்த மந்த்ரம் சமஸ்கிருதத்தில் உள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டும் என்று நினைத்து, இந்த சங்கல்பத்தை தமிழில் கொடுக்கிறோம். இந்த தமிழில் உள்ள மந்த்ரத்தை கூறி கங்கையில் குளிக்கலாம். அப்படி நாம் குளிக்கும் போது நம்முடைய அனைத்து பாவங்களும் தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

இந்த சங்கல்பத்தை பத்திரப்படுத்திக்கொண்டு, கங்கைக்கு செல்லும்பொழுது, இதை எடுத்துக் கொண்டு சென்று, இதைப் படித்துவிட்டு கங்கையில் குளிக்கலாம். இந்த சங்கல்ப மந்திரத்தை நம் நண்பர்களுக்கும் நாம் கொடுக்கலாமே!.

 

மேலும், சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, பீம ரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம், ஆ கி ய சந்தர்ப்பங்களிலும், கலச தீர்த்தங்களை தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது, இந்த மந்த்ரத்தை சொல்லிதான் அபிஷேகம் செய்வார்கள். வாத்தியார் / புரோகிதர் இந்த மந்த்ரத்தை சொல்லிக் கொடுப்பார், கர்த்தா இதைச் சொல்ல வேண்டும். இந்த மந்த்ரத்தை கூறி, அபிஷேகம் செய்து கொள்வதால் தான், இந்த தம்பதிகள் புனிதமடைகிறார்கள். அவ்வளவு முக்கியமானது இந்த மந்த்ரம்.

 

மேலும் புண்ய நதிகளிலும், புண்ய க்ஷேத்திரங்களில் உள்ள தீர்த்தங்களிலும் இந்த மந்த்ரத்தை கூறி குளிக்கலாம். அதாவது, நான் தவறு செய்து விட்டேன் அல்லது எனக்கு சாபங்கள் வந்து விட்டது, என்னை மன்னியுங்கள். என்னை புனிதபடுத்துங்கள், என்பதைப்போல் தான் இந்த மந்த்ரம்.

 

எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பாபங்கள், சாபங்கள், தோங்கள், திருஷ்டிகள், பிதுர் சாபங்கள் நிவர்த்திக்காகவும், சரீர சுத்திக்காகவும் இந்த ஸ்நாநத்தை செய்து கொள்கிறேன்.

 

என்னுடைய முதல் ஜென்மாவிலிருந்து இதற்கு முந்தைய ஜென்மா வரையிலும், இந்த ஜென்மத்தில், நான் பிறந்ததிலிருந்து இன்று வரையிலும். மேலும் என்னுடைய சிறிய வயதிலும், யயளவன வயதிலும், மத்திம வயதிலும், முதுமையான வயதிலும், நான் ஜாக்கிரதையாக இருந்த சமயத்திலோ, ஸ்வப்பனத்திலோ, அஜாக்கிரதையாக இருந்த சமயத்திலோ, மனதாலேயோ, வாக்காலேயோ, கர்மேந்திரியங்கலாளோ, காரணமில்லாமலோ, ரகஸ்யமாகவோ, பிரகாசமாகவோ, ஞானத்துடனோ, அஞ்ஞானத்துடனோ, ஏதாவது பலன் கருதியோ, பலன் கருதாமலோ, செய்த அனைத்து பாதகங்களும், மகா பாதகங்களும், உப பாதகங்களான பாதகங்களுக்கு துணை போனதாலோ, காரணமானதாலோ, எந்த ரூபத்திலும் உப பாதகத்திற்கு உடந்தையாய் இருந்ததாலோ, ஏற்பட்ட தோங்கள் எல்லாம் இந்த ஸ்நாநத்தால் நிவர்த்தியாகட்டும். மேலும் ஜாதிப்பிரஷ்டம் செய்யும் அளவுக்கு நான் தவறுகள் செய்திருந்தாலும், எனக்கோ, மற்றவர்களுக்கோ கெளரவம் குறையும்படி நடந்து கொண்டதினாலோ, இதனால் எனக்கு ஏற்பட்ட பாதகங்களிலிருந்தும், நான் ஞானத்துடனோ, அஞ்ஞானத்துடனோ சில காலங்கள் மட்டும் பாபங்கள் செய்திருந்தாலோ, இவையனைத்தும் இந்த ஸ்நாநத்தால் நிவர்த்தியாகட்டும்.

 

மேலும் கோ வதை செய்திருந்தாலோ, குருவுக்கு துரோகம் செய்திருந்தாலோ, தங்கத்தை திருடி இருந்தாலோ, சுரா பானாதிகள் அருந்தியிருந்தாலோ, ராஜபத்னி, குருபத்னி, த்வஜபத்னி, (நண்பர்கள் மனைவி), வேசி இவர்களை தொட்டதாலோ, நண்பர்களிடமிருந்து பணத்தையோ, பொருளையோ, திருடினதாலோ, கண்ட இடத்தில் சாப்பிட்டதாலோ, கெட்டுப்போன பொருட்களை சாப்பிட்டதாலோ, மனைவியை கைவிட்டதாலோ, மாதா, பிதாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விட்டதாலோ, பிராமணர்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும், துரோகம் செய்ததாலோ, நமக்கு சம்பந்தமில்லாத பெண்களை தொட்டதாலோ, ரஜஸ்வலா ஸ்திரிகளை தொட்டதாலோ ஏற்பட்ட பாபங்கள் அனைத்தும் இந்த ஸ்நாநத்தால் நிவர்த்தியாகட்டும்.

 

மேலும், குல தெய்வத்தால் ஏற்பட்ட சாபத்தாலோ, இஷ்ட தெய்வத்தால் ஏற்பட்ட சாபத்தாலோ, கிராம தேவதைகளால் ஏற்பட்ட சாபத்தாலோ, உபாஸனா தெய்வத்தால் ஏற்பட்ட சாபத்தாலோ, ரி´கள் சாபத்தாலோ, சித்தர்கள் சாபத்தாலோ, பிராமண சாபத்தாலோ, ராஜகுல சாபத்தாலோ, பித்ருக்கள் சாபத்தாலோ, மஹான்கள் சாபத்தாலோ, நவக்கிரஹங்களின் சாபத்தாலோ, ஸர்ப சாபத்தாலோ, மாத்ரு சாபம், பித்ரு சாபம், களத்ர சாபம், சகோதர சாபம், சகோதரி சாபம், புத்திர சாபம், புத்திரி சாபம், பெளத்திர, பெளத்திரி சாபம், ஜேஷ்டாதிகள் சாபம், கனிஷ்டாதிகள் சாபம், கர்ப்பிணி சாபம், விதவைகள் சாபம், வேசி சாபம், ஆகியவர்களின் சாபத்தாலோ, அனைத்து மிருகங்களினால் ஏற்பட்ட சாபத்தினாலோ, அனைத்து பட்சிகளால் ஏற்பட்ட சாபத்தினாலோ, பஞ்ச பூதங்களால் ஏற்பட்ட சாபத்தாலோ, நவரத்தினங்களால் ஏற்பட்ட சாபத்தாலோ, தீபத்தால் ஏற்பட்ட சாபத்தாலோ, பூர்வ ஜன்மத்தில் ஏற்பட்ட பாபங்களினாலோ, மற்றையோருடைய பொருட்களை திருடிய பாபத்தாலோ, பார்க்கத் தகாததைப் பார்த்ததாலோ, பண்டிதர்களையும், குருவையும் ஏக வசனத்தில் அழைத்ததால் ஏற்பட்ட பாபங்களினாலோ, நீர் நிலைகளுக்கும், காடுகளுக்கும், மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும், தான்யாதிகளுக்கும், மூலிகைகளுக்கும், மருந்துகளுக்கும், என்னால் செய்யப்பட்ட பாபங்கள் அனைத்தும் இந்த ஸ்நானத்தால் நிவர்த்தியாகட்டும்.

 

நான் தெரிந்தோ, தெரியாமலோ செய்த அனைத்து பாபங்கள், சாபங்கள், தோஷங்கள், திருஷ்டிகள், பிதுர்சாபங்கள் அனைத்தும் இந்த ஸ்நாநத்தால் நிவர்த்தியாகட்டும்.

 

இந்த ஒரு முழு மகா சங்கல்பத்தில், ஒரு சுருக்கமான மந்த்ரமும் இருக்கிறது. 

"எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பாபங்கள், சாபங்கள், தோங்கள், திருஷ்டிகள், பிதுர் சாபங்கள் நிவர்த்திக்காகவும், சரீர சுத்திக்காகவும் இந்த ஸ்நாநத்தை செய்து கொள்கிறேன்".

 

இந்த சுருக்கமன மந்த்ரத்தை நாம் தினமும், நம் வீட்டில் குளிக்கும் பொழுது கூட சொல்லலாம். நாம் தினமும் அழுக்கு போக குளிப்போம், அதே போல் நம்முடைய பாபங்களும், சாபங்களும் தீர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குளிக்கலாமே!

 

இவ்வளவு முக்கியமான இந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியும்படி செய்தாலே ஒரு தர்ம காரியம் தான். அதை நாம் எல்லோரும் செய்யலாமே.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.