மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். பெற்றோர்கள் ஆலோசனை கைகொடுக்கும். எதிலும் பொறுமையாக செயல்படவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தொழில் வியாபாரம் சிறப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பணத்தட்டுப்பாடு குறையும்.தனியாளாக எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, தூரத்து பயணங்களை தவிர்க்கவும்.அலைச்சல் அதிகமாக காணப்படும் கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிரியமானவர்கள் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும்.தேவையின்றி கடன் வாங்காதீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்ள முடியும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்ப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரும். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைத்தூக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, தியானம், யோக மன அமைதிக்கு வழிவகுக்கும். சவால்களை, விவாதங்களை சந்திக்க வேண்டிவரும். கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. பண தேவைகள் பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும். வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும்.வாகனங்களால் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே,பண வருவாய் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். வீடு மாற்றும் சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். அலைச்சல் அதிகமாக காணப்படும். வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டாகும்.திடீர் மருத்துவ செலவு வரும். உடல் நலனில் கவனம் தேவை.உத்யோகத்தில் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். வாக்கு சாமர்த்தியம் அதிகரிக்கும்.புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர். வேண்டியவர்களுடன் வாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த
மந்தநிலை நீங்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும்.பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.