மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கடுமையான சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடிவடையும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தன வரவு உண்டாகும். எதிரிகள் ஒதுங்கியே நிற்பர். வேண்டியவர்களால் சில மனஸ்தாபங்கள் வரக்கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சில சங்கடம் வரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வெளிநாட்டு யோகம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். கடன் தொந்தரவு குறையும். செய்தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். எதையும் தீர யோசித்து செய்யவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். பழைய பிரச்சனைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் புது வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. முக்கிய விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சுப செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எதையும் எதிர்த்து போராடும் துணிச்சல் இருக்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தினரை அனுசரித்துப் போக வேண்டிவரும். பெற்றோர் பக்கபலமாக இருப்பர். சொத்து விவகாரத்தில் சில வில்லங்கம் இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும் .