மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்கள். முன் கோபத்தால் மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். சொத்து பிரச்சனை அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும் ஆசைப்பட்ட பொருள் வாங்க முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிக்குள் யோசனை கேட்டு முடிவுகள் எடுங்கள் .குடும்பத்தில் சுப விரைய செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும்.கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து போகும்.ஏற்கனவே இருந்த மனக்குழப்பம் நீங்கும். நண்பர்களால் சில நேரங்களில் மனசங்கடம் ஏற்படும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப நபர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும் தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் கைகூடும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வீட்டு அருகாமையில் உள்ளவர்களின் ஆதரவுப் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனை பெரியதாக பாதிக்காது. உற்சாகத்துடன் காணப்படுவீர்கள் புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். முக்கிய காரியங்களை முடிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். விலகி சென்ற சொந்தங்கள் வந்து சேரும். வீடு பராமரிப்பு செலவு செய்வீர்கள். பெற்றோருடன் வீண் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.தொழில் வியாபாரம் நிறைவாக இருக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் வீண் செலவுகள் வந்துப் போகும். கணவன் மனைவிக்குள் கருத்து மேதல்கள் உருவாகும்.யாருக்காகவும் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். தொடர் வேலைகளால் அசதி, சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். முன் பின் தெரியாத நபர்களிடம் கவனமாக இருக்கவும். பண விவகாரங்களில் கராறாக இருக்கவும்.தேவையின்றி கடன்கள் வாங்காதீர்கள். ஆன்மீகம் தியானம் மன அமைதியை தரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நண்ர்களே, நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். சொந்த, பந்தங்களால் ஆதாயம் உண்டு. பல விதத்திலும் சுகமும் சந்தோஷமும் கிடைக்கும்.புதிய வாகன யோகமும் சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது அதற்கான முயற்ச்சிளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
.
இன்றைய ராசி பலன்கள்- (17-02-2025 திங்கட் கிழமை)

.