மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். பிரியமானவர்கள் பாச மழை பொழிவர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நல்ல செய்தி ஒன்று வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களால் சில நன்மைகளும் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். தன வரவு இருக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பு நன்மை தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பழைய பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படவும். வாக்கு வன்மை கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். கடன் சுமை அவ்வப்போது இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். வேண்டுதல் நிறைவேறும். பெரியோர்களின் ஆசி கிட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.