Breaking News :

Sunday, February 23
.

இன்றைய ராசி பலன்கள் (29-01-2025 புதன் கிழமை)


மேஷம்
மேஷம்:  ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தமாதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்
மிதுனம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமையடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

கடகம்
கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

கன்னி
கன்னி: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்களும் உண்டு. விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்
துலாம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு
தனுசு: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

மகரம்
மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.  தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்
கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மீனம்
மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.