வக்ரம் என சொல்லப்படுவது, சூரியனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில், கிரகங்கள் செல்லும் பொழுது வக்கிரம் அடைவதாக சொல்லப்படுவதுண்டு .
அதாவது முன்னோக்கி செல்லும் கிரகங்களான, குரு, செவ்வாய் ,சனி புதன், சுக்கிரன் .ஐந்து கிரகங்களும் திடீரென பின்னோக்கி செல்வதாக சொல்லப்படுவதே வக்கிரம் என்பதாகும் ராகு கேதுக்கள் எப்பொழுதும் பின்னோக்கி சுழலும் கிரகங்கள் என்பதால் அவர்கள் எப்பொழுதுமே வக்கிர நிலையிலேயே சுழல்வார்கள் ..
ஆனால் அறிவியலின் படி கிரகங்கள் எப்பொழுதும் வக்கிரம் அடைவதில்லை ..பூமிக்கு மிக அருகில் கிரகங்கள் வரும்பொழுது, அவை பின்னோக்கி செல்வது போல் ஒரு மாயத் தோற்றமே வக்ரம் ஆகும் ..
சரி வக்கிரம் அடைந்த கிரகங்கள் எவ்வாறு பலன் அளிக்கின்றன ..
வக்ர கிரகங்கள் உக்ர பலம் என்ன சொல்லப்படுவதுண்டு அதனுடைய, காரகத்துவம் மற்றும் ஆதிபத்திய ரீதியிலான, பலன்கள் கிடைப்பதற்காக ஜாதகர் எப்பொழுதும் ஒரு போராட்டம் இருந்து கொண்டே இருக்கும் .
அதாவது வக்கிரம் அடைந்த கிரகத்தின் காரகத்துவங்களை ஜாதகருக்கு கிடைப்பதற்கு எப்பொழுதும் அதில் ஒரு ஏக்கமும் தயக்கமும் இருந்து கொண்டே இருக்கும் ..எந்த கிரகம் வக்கிரம் அடைந்து உள்ளதோ அந்த குறிப்பிட்ட கிரகத்தின் கர்ம வினை முன் வினை கர்மம் அதிகமாக உள்ளது என்பதே பொருளாகும் .(luggage over loading)
பொதுவாக வக்ரம் அடைந்த கிரகத்தின் தசா புக்தி காலத்தில், ஒருவிதத்தில் அதிகப்படியான காரகத்துவமும் ஆதிபத்திய பலன்களும் கிடைக்க கிடைக்கப் பெற்று அதன்மூலம் பிரச்சனைகளையும் கொடுக்கும் ..
சுப கிரகங்களான குரு சுக்கிரன் போன்ற கிரகங்கள், வக்ரமடைந்து ஆதிபத்திய ரீதியிலான நற்பலன்களும் ஆட்சி, நட்பு வீடுகளில் நின்று தசா நடத்தும் பொழுது நற்பலன்களை இரட்டிப்பாகும் தருவதுண்டு அதேபோல பாவ கிரகங்கள் வக்கிரம் அடைந்து, தசா நடைமுறைக்கு வரும் பொழுது தீய பலன்களை அதிகரித்து தரும் ..
ஒரு கிரகம் உச்சம் அடைந்து வக்கிரம் அடைவதை தவிர மற்ற நிலைகளில், நட்பு சமம் ஆட்சி போன்ற நிலைகளில் நற்பலன்களையே செய்யும். (ஆதிபத்திய ரீதியிலான அமைப்பையும் பொறுத்தே பலன்கள் நடக்கும்) ..
பாவ கிரகங்களை பொருத்தவரை உச்சம் அடையாமல் வக்கிரம் அடையும் பொழுது, தசாபுத்தி நடைமுறைக்கு வரும் பொழுது நிச்சயம் கெடுபலன்களை இரட்டிப்பாக தரும் ..ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக சுபர் தொடர்புகள் போன்றவையும் உண்டு என்பதை உணர்க ..
பரிகாரமாக எந்த குறிப்பிட்ட கிரகம் வக்ரம் பெற்று உள்ளதோ அது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் தானதர்மங்கள் ஈடுபடுவதன் மூலம், கெடுபலன்கள் குறையும் ..