பிள்ளையார் நோன்பு வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.
நாம் ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.
அதைப்போல, திருக்கார்த்திகை நாளிலிருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்க வேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகை பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டியில் பணியாரம் செய்து கணபதியை வழிபட வேண்டும்.
21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி வெல்லம் இணைந்த அரிசி மாவை நடுவில் வைத்து இழை எடுத்துக் கொள்வது வழக்கம்.
.
இந்த வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் வாரிசு பிறக்கும் என்பதும் நம்பிக்கை. ஐந்து வகைப் பொரி என்பது - நெல் பொரி, கம்பு பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள்ளுப் பொரி ஆகியன ஆகும்.
*விநாயகருக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்?*
விநாயகருக்கும் ராசி கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன.
மனிதர்கள் கிரகங்களின் இடப்பெயர்ச்சிகளால் அடையும் பலாபலன்கள் அவரவர் ராசிகளையும் சென்றடைகிறது.
இந்த ராசிகளுக்கான முழுமுதல் அதிபதியாக திகழ்பவர் விநாயகர்.
கணபதி என்று அழைக்கப்படும் அவர் மீது 12 ராசிகளும் வீற்றிருக்கும் நிலையே யோக கணபதி நிலையாகும்.
எனவே பன்னிரண்டு ராசிக்காரர்களும் விநாயகர் சதுர்த்தி திதி நேரத்தில் விநாயகருக்கு ராசிக்கேற்ப உகந்த தீர்த்த பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் சுபிக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருக்கு சாணப்பொடியால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மிதுன ராசிக்காரர்கள் விநாயகருக்கு எலுமிச்சை சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
கடக ராசிக்காரர்கள் விநாயகருக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
கன்னி ராசிக்காரர்கள் விநாயகருக்கு சாத்துக்குடி அல்லது நார்த்தம்பழத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
துலாம் ராசிக்காரர்கள் விநாயகருக்கு தேனால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
தனுசு ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி அல்லது தேனால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மகர ராசிக்காரர்கள் விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.