பொதுவாகவே விருச்சிக ராசி நண்பர்கள் கம்பீரத் தோற்றத்தில் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள் விருச்சிக ராசிக்காரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தேளின் குணத்தை கொண்டவர்கள் என்பதால் குறும்புத்தனம் மற்றும் விஷமத்தனமும் அதிகமாக காணப்படும் தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டே இருப்பார் பார்ப்பதற்கு அப்பாவி போல் இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தில் வகிப்பார்கள் பிடிவாத குணம் அதிகமாக கொண்டவர்கள் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும்.
இவர்களிடம் எளிதில் பேசி வெற்றி பெற முடியாது முன்கோபமும் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களும் இருப்பதால் இவர்களிடமிருந்து ஒரு அடி விலகிய இருப்பது நல்லது முன்பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள் இவர்களிடம் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கும் என்பதை மறக்க முடியாது எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது அயராது முயன்று வெற்றிப்பெறக்ககூடியவர்கள்.
இந்த 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை காண்போம் வரும் மே மாதம் வரை குரு பகவான் ராசிக்கு ஏழாம் இடத்திலே அமர்ந்து நன்மைகளை வழங்கி வருவார் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் திருமணங்கள் நடந்தேறும் குழந்தை பாக்கியம் தடை இன்றி கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கும் உறவினர்களால் நன்மைகள் நடக்கும் 10 5 2025 குரு பெயர்ச்சியில் ஏழாம் இடத்தில் இருந்த குரு பகவான் அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்திற்கு செல்கிறார் எட்டாம் இடத்தில் அமர்ந்த குரு சில மனக்கசப்புகளும் சங்கடமும் தருவார் கடந்த ஒரு வருடமாக நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான் எதிர்மறையான பலன்களை தர தொடங்குவார் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் தேவையில்லாத பிரச்சினைகள் தலையிடாதீர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.
கடந்த வருடத்தை போலவே சனிபகவான் இவ்வருடமும் பெரிய பலன்களை வழங்காது 29-3-2025 வரை சனி பகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பார் சனி பெயர்ச்சியால் 5-ம் இடத்துக்கு நகர்கிறார் 4 மற்றும் 5-ம் இடங்கள் சனி பகவான் யோக நிலைகளை வழங்க மாட்டார் இதனால் தேக ஆரோக்கியம் கெடும் மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாக காணப்படும் தொழில் எதிரிகள் முளைப்பார்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும் உடல் உபாதைகள் தோன்றும் வயிறு சம்பந்தப் பிரச்சனைகள் வரக்கூடும் புத்திர வகைகள் மனக்கசப்புகளும் மன ஸ்தாபங்களும் வரும் முன்கோபத்தை தவிர்க்கவும் அனைவரிடம் அன்புடனும் கருணையுடன் பேசி பழகுங்கள்.
ராசிக்கு 11ஆம் இடத்தில் அமர்ந்து கேது பகவான் நன்மைகளை வாரி வழங்குவார் 18-5-2025 ராகு+ கேது பெயர்ச்சியில் கேதுபகவான் 10-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் பொதுவாகவே அசுபத்தன்மை பெற்ற கோள்கள் 3,6,10,11. இடங்களை சஞ்சரிக்கும் பொழுது சுப பலன்களை வாரி வழங்குவார்கள் அந்த வகையில் கேது பகவான் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்மறையான பணங்கள் தன வரவுகள் திடீரென கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் மன அமைதி கிடைக்கும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் அடிக்கடி விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் புதிய வாகன யோகமும் உண்டு வெளிநாடு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
5-ம் இடத்தில் இருந்த ராகு பகவான் ராகு+கேது பெயர்ச்சியிலும் 4-ம் இடத்திற்கு பின்னோக்கி வருவதால் ராகுவால் பெரிய நன்மைகளை வழங்க முடியாது இதனால் பணியிடை மாற்றங்கள் அதனால் மன அமைதி கெடும் சூழல் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்குள் போடாதீர்கள். ஆன்லைன் சூதாட்டம் பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும் தேவையின்றி கடன் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது.
பெண்களுக்கு!
ஆடம்பர செயல்களை தவிர்க்கவும் வேலை செல்லும் பெண்களுக்கு பனி சுமை அதிகமாக காணப்படும் சம்பள உயர்வு இருக்காது கணவன் மனைவிக்குள் தேவையில்லாத விவாதங்கள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு!
வேலைகள் திருப்தி இருக்காது மேலதிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கி இருப்பீர்கள் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக காணப்படும் உடல் உபாதைகள் வரக்கூடும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள்.
மாணவர்களுக்கு!
படிப்பில் ஆர்வம் குறையும்
மந்தநிலை காணப்படும்
சோம்பலை விரட்டி
படிக்க தொடங்கினால் இந்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் படிக்க தொடங்குங்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில்
முருக பெருமானுக்கு 6 மண் அகல் விளக்கில் நல்லெண்ணை தீபமேற்றி 6 முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வாருங்கள் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள் முருகனின் அருளால் நல்லதே நடக்கும்.