பேரறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்டு வென்ற தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் @ThamizhachiTh அவர்களுக்கு நம் வெற்றிச்சின்னமாம் உதயசூரியனுக்கு ஆதரவாக வேளச்சேரி காந்தி சாலையில் இன்று வாக்குச் சேகரித்தோம்.
முதலமைச்சரின் காலைச்சிற்றுண்டித் திட்டம் போன்ற நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள், இந்தியா மட்டுமின்றி கனடா போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படுவதை எடுத்துச் சொல்லி பரப்புரை மேற்கொண்டோம். இந்தியா கூட்டணியின் வெற்றியை தெற்கிலிருந்து உறுதி செய்ய தென் சென்னையின் பங்களிப்பு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறி, உரையாற்றினோம்.