மாபெரும் கவிஞன் பாரதி, 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார்.
பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி அதிகாலையில், தனது 39 ஆவது வயதில் உயிர் நீத்தார்.அவருடைய இறுதி யாத்திரையில் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலம் இப்படி பரிதாபத்திற்குரியாதாய் நிகழ்ந்தது. அந்த 14 பேரில் இருவர் உறவினர். இருவர் நண்பர்கள். மீதி 10 பேரின் விவரங்கள் தெரியவில்லை.
பாரதி கடைசியாக ஈரோட்டில் உள்ள கருங்கல்பள்ளத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் உரையாற்றிய தலைப்பு: மனிதனுக்கு அழிவில்லை.