இந்தியா டுடே செக்ஸ் சர்வே 2023
வெளியீடு : இந்தியா டுடே ஆங்கில பதிப்பு ஏப்ரல் 10 ,2023
விலை :₹ 100
வகைமை : பாலியல்
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு 2019 பிறகு கொரனா காலகட்டத்திற்கு பிறகு இந்தியா டுடே வெளியிட்டுள்ள பாலியல் சர்வே இது. பாலியல் இடைவேளை என்று தலைப்பிட்டு வெளிவந்துள்ளது.
கொரனா காலத்திற்கு பிறகான மன அழுத்தம் இந்தியர்களிடே பாலியல் பிரச்சனையை அதிகரித்துள்ளதாக சொல்கிறது.அதே சமயம் அன்லைன் செக்ஸ் சந்தைகள் ,பார்னோகிராபி,செக்ஸ் டாயிஸ் ஆகியவற்றின் வியாபாரம் பெருகி உள்ளதாக சொல்கிறது.ஆன்லைனில் செக்ஸை அணுகுவதில் எளிதாக இருப்பதாக இந்தியர்கள் கூறுகிறார்கள்.
கன்னித்தன்மை இழப்பதற்காக சராசரி வயது இந்தியர்களிடையே 20 ஆக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. பாலியல் கிளர்ச்சிக்கு உரையாடல்களே முக்கியத்துவம் அளிப்பதாக 2023 ல் சொல்கிறது.அதே சமயம் பாலியல் குற்றங்கள் இந்திய அரசின் தண்டனைகள் என்ன என்பதையும் சொல்கிறது.படிக்க தகுந்த மாறி வரும் பாலியல் ரசனைகளை அறிய வாசிக்க தகுந்த இதழ்.
2005 இந்தியா டுடே தமிழ் பதிப்பில் நடிகை குஷ்பு கன்னித்தன்மை பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் காலமாற்றத்தில் அதற்கு அப்பாற்பட்டு ரசனைகளும் சமுதாய அமைப்பும் மாறி வருகிறது எனலாம்.