புத்தகம்:ஜென் கதைகள்
ஆசிரியர் : ஓசோ
வெளியீடு: அகம்அற்புதம்
பக்கங்கள்: 48
ஜென் என்பதற்கு இயல்பாக இருப்பது என்று பொருள். தன்னை தானே அறிந்து கொள்ளுவது தான் ஜென்.
மொத்தம் 30 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. கதைகள் அனைத்தும் ஒரு பக்கம் அல்லது ஒன்றரை பக்கத்திலே முடிந்து விடுகிறது.
பக்கத்தின் அளவை வைத்து குறைத்து மதிப்பிட முடியாத அளவு கருத்தின் ஆழம் அதிகம் புதைந்துள்ளது.
சின்னஞ்சிறு கதைகள் மூலம் வாழ்வியில் எதார்த்தத்தை கற்றுத் தருகிறது.
சில கதைகளானது ஜென் மடலாயத்தில் சீடர்களிடைய எழும் சந்தேகங்களுக்கும் அவர்களது கேள்விகளுக்கும் தன்னுடைய விளக்கத்தை சரியான முறையில் ஜென் குரு முன் வைக்கும் போது, அம்மாதிரியான சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்ற புரிதலை ஒவ்வொரு கதையின் வழியாக கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும்.
சில கதைகளின் தாக்கம் வாசித்த முடித்த பின்னும் சிந்திக்க வைத்தது.
சரியானதும் தவறானதும் என்ற தலைப்பில் திருடும் மாணவனை திருத்த ஜென் குரு கூறும் பதிலே அவனிடம் பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது.
அச்சீடனை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும், இல்லையென்றால் மற்ற சீடர்கள் அனைவரும் வெளியேறிடுவிடுவோம் என்று தங்கள் கோரிக்கையை சீடர்கள் முன் வைக்கிறார்கள்.
அதற்கு குருவிடமிருந்து வந்த பதில் சிறப்பாக இருந்தது.
பெரும்பாலும் தவறிழைக்கும் மாணவன் பிழைகளை காலமெல்லாம் சுட்டிக் காட்டி குற்ற உணர்வை அவனிடம் உருவாக்கி ஒதுக்காமல், அவனின் நலன் கருதி குரு எடுத்த முடிவு வெக சிறப்பாக இருந்தது.இந்த கதையை வாசிக்கும் போதே இக்காலக்கட்டத்தில் இப்படியான ஆசான் கிடைப்பதெல்லாம் எவ்வளவு சாத்தியம் என்பது குறித்து நீண்ட நேரம் இது குறித்து சிந்திக்க வைத்ததது.
குருவின் பதில்:
இங்கிருந்து அனுப்பிவிட்டால் யார் அவனுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுப்பார்கள்?
அடுத்த ஒரு கதையில் மரணம் குறித்த செய்தி:
பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?
நாம் வாழும் வாழ்க்கையை விடுதியுடன் ஒப்பிடுகிறார் குரு.
இந்த பூமியில் யாரும் நிரந்தரமாக இருக்க போவதில்லை என்பதை சிறப்பாக விளக்கம் கொடுத்த கதை.
இப்படி ஒவ்வொரு கதையின் ஒவ்வொரு வரிகளிலும் வாழ்வியல் உண்மையை உணர முடிந்தது.நம்மை சிந்திக்க வைக்கும் தொகுப்பு தான் இந்நூல்.