புத்தர், மகாவீரர் தோற்றத்திற்குப் பிறகு, உணர்வுகளை ஒடுக்கும் ஒரு நோய் கொண்ட பிரம்மச்சரிய மரபு இங்கே நிலை கொள்ள ஆரம்பித்து விட்டது.
நான் கஜுராகோவுக்கு நூற்றுக்கணக்கான முறை போயிருக்கிறேன்.
நிர்வாணப் படமோ, சிலையோ உங்கள் காம உணர்வைத் தூண்டினால் மட்டுமே அது ஆபாசம், உங்களுக்குக் காம உணர்வு தோன்றினால், அந்தக் கலைப் படைப்புஉணர்வைத் தூண்டி விடுவதாகப் பொருள்.
தியானம் செய்ய வருபவர்கள் அங்கே அமர்ந்து அந்த சிற்பங்களைப் பார்ப்பார்கள்.
அவற்றால், காம உணர்வு தங்களுக்குள் எழுகிறதா என்று கவனிப்பார்கள். அவ்வாறு எதுவும் தோன்றவில்லை என்றால், அந்த மனநிலைதான் உள்ளே செல்வதற்கான சான்றிதழ்!
தியானம் செய்யப் போகிறவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது. எந்த உணர்வும் இல்லையென்று உறுதிப் படுத்திக் கொள்ள அது தேவைப்படுகிறது.
அவர்களின் சாதாரணக் காம உணர்வைத் தவிர்க்கவே அது பயன்படுகிறது.
அப்புறம் அவர்கள் உள்ளே செல்லும் தகுதி படைத்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் உள்ளே போக மாட்டார்கள்.
காம உணர்வுடன் ஆலயத்திற்குள் செல்வது குறைபாடு ஆகிவிடும்.
அது ஆலையத்தை அசிங்கப்படுத்தி விடும். ஆலயத்தை அவமதிப்பதாகி விடும்.
-ஓஷோ