நாகமாணிக்கம் என்பது நாகப்பாம்புகளால் கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. நாகமாணிக்கம் பற்றி பல 100 ஆண்டுகளாக பல கருத்துக்கள் நிலவி வருகிறது. மாணிக்கம், இச்சாதாரி நாகம் (மனித உருவை எடுக்கும் நாகம்), ராஜநாகம் என்றெல்லாம் பல கருத்துகள் அன்றிலிருந்து இன்றுவரை நிலவிவருகின்றது. இருப்பினும் இது தொடர்பான எதிர்கருத்துக்களை விஞ்ஞானிகள் முன்வைத்தாலும், சரியான அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.
“நாக மாணிக்கம்” தொடர்பாக ஆன்மீகத்தில் கூறப்பட்டும் கருத்துக்கள் பலராலும் நம்பப்பட்டு வருகின்றார்கள் என்றால் அது மிகையாகாது. “நாகமாணிக்கம்” என்பது நாகங்கள் மனிதர், மிருகம், கீரி என யாரையும் கடிக்காமல் சுமார் 60 வருடங்களாக இருப்பதால் அதன் கடைவாயில் தேங்கி உள்ள விஷமே இறுகிப்போய் நாகமாணிக்கமாக உருமாறுகின்றது. இந்த நாகமாணிக்கத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம். இந்தக் கல் மிகவும் அபூர்வமானது.
பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களிலும், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள்ளும் இவ்வாறான நாகங்கள் வாழும். இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும். அது மட்டுமின்றி ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாகமாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.
இப்படிப்பட்ட நாகங்கள் சுமார் 110 முதல் 150 ஆண்டுகள் வாழக்கூடியன. இதனால் பயன்படாத இதன் விஷமானது நாளடைவில் நாகமாணிக்கமாக உருவாகும்.
இந்த பாம்புகளுக்கு நாகமாணிக்கம் உருவாகும் தருவாயில் இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை கொண்டவையாக காணப்படும். அமாவாசை தினங்களில் காரிருள் காரணமாக ஒளியின்றி பாம்புகள் இரை தேட வசதியின்றி இருக்கும். அவ்வாறான நிலையில் இந்த நாகரத்தினத்தை வெளியில் கக்கி அதன் ஒளியில் இரை தேடும், இதற்கான காரணம் யாதென்று தெரியுமா? இந்த நாகமாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் வந்து நாகமாணிக்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும்.
இவை பல நூறு வருடங்களாக சேமித்த விஷத்தில் உருவாகிய காரணத்தினால் மகா கொடிய விஷத்தன்மை வாய்தது. கையில் காயம் உள்ள யாரேனும் இதனை தொட்டால் உடனே மரணம் நேரும். அதுமட்டுமல்ல வாயில் வைத்தாலோ புண்களில் பட்டாலோ உடனே மரணம் நேரும்.
இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும். இந்த பூமியில் விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது. சிலவற்றை மனித உணர்வாலும் சிலவற்றை தியானத்தாலும் மட்டுமே உணரமுடியும் என ஆன்மீகக் கதைகள் கூறுகின்றன.