நாலு பசங்க ஒன்னு கூடி பேச ஆரம்பிச்சா, சினிமா, அரசியல், விளையாட்டுனு ஓரிரு தலைப்புக்கு அப்புறம் அந்த உரையாடல் கண்டிப்பா காமம் பத்தின பேச்சுகளா தான் பெரும்பாலும் இருக்கும்.
பொது வெளியில் பேசப்பட வேண்டிய பாலியல் குறித்த புரிதல்களை, மறைத்து மறைத்து வைத்து காமம் என்றாலே எதோ கெட்ட வார்த்தை என்ற மாய தோற்றத்தை இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது.
பெண்களின் அக மற்றும் புற உணர்வுகளைப்பற்றி தெளிவான புரிதல் இல்லாமல். வெறும் ஆபாச சிந்தனைகள் மேலோங்கி பொது புத்தியில், இச்சைகளை விழுங்கும் மனித மிருகங்களாகவே பெரும்பாளான ஆண்களின் மனவோட்டாம் இருப்பதையும், பாலியல் கல்வி கற்பிக்காத இந்த சமூக கட்டமைப்பையும் நாவலாசிரியர் நாவலில் தெளிவாக விளக்கியிருக்கிறார். பதின் பருவத்தில் ஏற்படும் காம சிந்தனைகள் மற்றும் உறவில் ஏற்படும் சந்தேகங்களுக்கு (மீட்டர் – இன்ச் – சென்டி மீட்டர்) க்கும் வித்தியாசம் தெரியாமல் சந்திரசூடன் (கதாப்பாத்திரம்) வாய்க்கு வந்ததைஅள்ளிவிடும் பதில்கள் அறிவியலை மிஞ்சும் கற்பனை.
சிவாவும் நவிராவும் முதல் முறை புணறும்போதுதான், பல ஆண்டுகளாக காமம் பற்றிய புணர்தல் பற்றி தான் தேக்கி வைத்திருந்த கற்பனை மணற் கோட்டையை ஒரு நொடியில் கடலலை விழுங்கியது போல, ஒரு பெரும் ஏமாற்றத்தை முதல் உறவின் முடிவில் அவன் உணர்ந்ததை நாவல் படிக்கும் அனைவருக்கும் கடத்தியது அபாரம்.
(குறிப்பு : முதல் முறை புணர்ந்தவர்களுக்கு அந்த அனுபவம் புரியும்).
காதல் கண்னை மறைத்து உடல்வேட்கையில் கலவியில் திளைக்க எத்தனிக்கும் சிவா, நாவலின் இரண்டாம் பாதியில் ‘எனக்கு நீ தா முக்கியம், அது இல்ல‘ என்று காதலில்லா காமம் வெற்று உடல்வேட்கைக்கு போடப்படும் தீனியாக உணரும் தருணம். உண்மை காதலை உணர்ந்த ஆசுவாசத்தை நவீராவுக்கு மட்டுமல்ல வாசிக்கும் வாசகர்கள் மனதிலும் ஏற்படுத்துகிறது.
என் கருத்தில் தற்போதைய சூழலில் இளம்பருவ, பதின் பருவ ஆண்கள் பெண் மன உணர்வுகளை புரிந்து கொள்ள அவசியமான நாவலாக ‘சான்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது’ நாவலை பார்க்கிறேன்.
இயக்குனர் நண்பர் தரணி ராசேந்திரன் மற்றும் நண்பர்கள் துவங்கி உள்ள வர டீ பதிப்பகம் சார்பாக வெளியாகியுள்ள முதல் நாவல் என்பது குறிப்பிடதக்க ஒன்று. வாழ்த்துகள் மேலும் பல சிறந்த படைப்புகள் வர டீ பதிப்பகத்தில் வெளியாக வேண்டும்.