Breaking News :

Sunday, February 23
.

3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவலிங்கம்?


இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மரகத நடராஜர் மிகப்பெரிய திருமேனியாக அமைந்துள்ள திருத்தலம். இத்தல இறைவனுக்கு மங்களநாதர் என்பதும், இறைவிக்கு மங்களநாயகி என்பதும் திருநாமம் ஆகும்.

நடராஜர் மரகதத்தால் ஆனவர் என்பதால் இத்தலத்தை சிலர் இரத்தின சபை என்கிறார்கள். ஆனால் மிகவும் தொன்மையான திருத்தலம் என்பதால், இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் கூறுகிறார்கள். இத்தலதிற்கே உரிய தனிச்சிறப்புகள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நிகழ்ந்தது.  அக்காலத்தில் இத்தலம் சிவபுரம், 'தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

இத்தல பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.  வித்தியாசமாக கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

இத்தல முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்றும், இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம்.  உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

இத்தல கோவில் குளத்தில் வாழும் மீன்கள், சுவையான நீரில் வாழும் மீன்கள் அல்ல. கடல்நீரில் வாழும் மீன்களாகும். சிவ பூசைக்கு விலக்க வேண்டியது தாழம்பூ. ஆனால் பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.  காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. 4. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.