Breaking News :

Thursday, November 21
.

அகிலாண்டேசுவரியின் காதில் இரண்டு தோடுகள் போட்டிருப்பதன் ரகசியம்...!


திருவானைக்காவல் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

பஞ்ச பூதத் தலங்களில் அப்பு(நீர்)தலமாக விளங்குவது திருவானைக்காவல்.மூலவர் ஜலகண்டேசுவரராகவும்,
அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.

வராகி அம்சமான அகிலாண்டேசுவரி,ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.எனவே,பூஜை செய்பவர்களும்,பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.

இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட,அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது.அம்பாள் சாந்த சொரூபியானாள்.

ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.எனவே,இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

ஒன்று சிவச்சக்கரம்.மற்றொன்று ஸ்ரீசக்கரம்.இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும்.

மேலும், அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும்,முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.