Breaking News :

Thursday, November 21
.

அண்ணாமலையார் கிரிவலம்


ஆம், தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அற்புத லீலையை அண்ணாமலையார் நடத்திக் கொள்ள உள்ளார். அதுவும் தன்னில் சரி பாதியான உண்ணாமுலை அம்மையோடும் மற்றும் தனது பரிவாரங் களோடும் இந்த அற்புத லீலையை நடத்த உள்ளார். 

 

இந்த மலை ஈசனின் அம்சமாகவே வணங் கப்படுகிறது. திருமாலுக்கும் பிரம்மனுக் கும் தன்னைக் காண்பித்து அவர்களின் ஆணவம் ஒடுக்கிய ஈசன், பிரமாண்ட லிங்க ரூபமாய் சிவலிங்க வடிவமாய் குளிர்ந்து இங்கேயே அமர்ந்தார். அதனால் இங்கு மலையே சிவலிங்கமாகக் காட்சி அளிக்கிறது.

 

தானே லிங்க ரூபமாய் அமர்ந்த பிறகு, அதை ஏன் ஈசன் சுற்றி வலம் வரவேண் டும்? அதற்கும் ஒரு புராண கதை உண்டு. அதிலும் மண்ணில் உள்ள உயிர்களுக்கு ஒரு பாடம் உண்டு. 

 

ஒருமுறை ஈசனின் இரு கண்களையும் அன்னை சக்தி மூடி விளையாடியதால் சர்வலோகமும் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. இதனால் சாபம் பெற்ற சக்தி, திருவண்ணாமலைக்கு வந்து ஈசனை வழிபட்டு விமோசனம் பெற்றாள். 

 

அப்போது ஈசனாரிடம் தேவி 'உங்களை பிரியாது இருக்கும் வண்ணம் தங்களில் சரிபாதியாக நான் இருக்க அருள வேண் டும்' என்று வேண்டினாள்.

 

ஈசனும் 'என் பிரமாண்ட வடிவத்தை அதி காலை 2 நாழிகைக்குள் நீ சுற்றி வர வேண்டும், அப்படி வந்தால் என்னில் சரிபாதி என்ற அந்தஸ்தை வழங்குவேன்' என்றார். 

 

அன்னை அதை ஏற்று 'எங்கும் வியாபித்து நிற்கும் ஈசன், இங்கு மலையாக வீற்றிரு க்கிறார் என்பதை உணர்ந்து திருவண் ணாமலையையே ஈசனாக பாவித்து, தன் கரங்களை சிரசின் மீது வைத்து கூப்பிய படி வலம் வந்தாள். 

 

முதன்முதலாக கிரிவல பிரதட்சணத்தை தொடங்கி வைத்த அன்னையோடு அரூபமாக அண்ணாமலையாரும் வலம் வந்தாராம்.

 

அப்போது கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை ஆலயத்துக்கு அருகே நந்தி வாகனத்திலும், ஈசான்ய லிங்கத்து க்கு அருகே ஒளி ரூபத்திலும் காட்சி கொடுத்து அருள் செய்தார். பிறகு கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் தன்னுள் இணைத்துக் கொண்டு அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டார். 

 

அப்போது அன்னை, 'சுவாமி சொல்ல முடி யாத புண்ணியங்களைக் கொண்ட இந்த தெய்வீக மலையை நான் வலம் வந்து உங்களுள் இணைந்ததைப் போல, இங்கு வந்து கிரிவலம் வரும் ஒவ்வொரு ஜீவனு க்கும் தாங்கள் அருள் வழங்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். தேவியின் வேண்டுகோளை அண்ணாமலையாரும் ஏற்றுக்கொண்டார்.

 

கிரிவல மகிமை

 

அதன்பிறகு ஈசனை எளிதாக தரிசிக்க கிரிவலமே சிறந்த வழி என்று கண்டு கொண்ட தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் உள்ளிட்ட 18 கணத்தாரும் மானிடர்களுக் கு பிற ஜீவராசிகளும் திருவண்ணாமலை யில் கிரிவலம் அருள் பெற்றனர். 

 

நான்கு யுகங்களிலும் இந்த கிரிவல பிரத ட்சணம் நடைபெற்றதாக தலவரலாறு கூறுகின்றது. இந்த கலியுகத்தில் கிரிவல மகிமை முதன்முதலாக பெருமை கொண் டது பாண்டிய மன்னன் வஜ்ராங்கதன் காலத்தில் என்கிறார்கள்.

 

பாண்டிய மன்னன் வஜ்ராங்கதன், ஒருமு றை வேட்டையாடுவதற்காகச் சென்றான். வேட்டையில் வாசனையும் ஒளியும் மிக்க புனுகுப் பூனையை கண்டான் அந்த பூனை யை பிடிக்க ஓட, அது அவனிடமிருந்து தப்பி அண்ணாமலையை அடைந்தது. 

 

விடாது குதிரையில் மன்னனும் விரட்ட அது மலையை 5 முறை கிரிவலம் வந்தது. விரட்டியபடியே மன்னனின் குதிரையும் 5 முறை கிரிவலம் வந்தது. கிரிவலம் முடிந் ததும் ஆலயத்துக்கு எதிரே வந்தபோது பூனையும் குதிரையும் உயிரை விட்டு மண்ணில் விழந்தது. மன்னன் மட்டுமே தப்பினான். மன்னன் வியக்க அந்த அதிசயம் நடந்தது...

 

இறந்து போனவை கந்தர்வர்களாக காட்சி தந்து விண்ணுலகம் செல்லத் தொடங்கி ன. ஆச்சர்யம் கொண்ட மன்னன் அவர்க ளை யாரென்று வினவ, 'கயிலையில் சிவபூஜையில் அபசாரம் செய்த கந்தர்வ ர்கள் நாங்கள், சாபப்படி பூனையாகவும் குதிரையாகவும் இங்கு தனித்தனியே வாழ்ந்தோம். இருவரும் ஒன்று சேர, ஒரு வரை ஒருவர் துரத்தி அதன்வழியே இந்த புண்ணிய மலையை 5 முறை வலமும் வந்தோம். அதனால் இன்று சாப விமோச னம் பெற்று கயிலாயம் செல்கிறோம். குதிரை மீது ஏறி நீ கிரிவலம் வந்ததால் பலன் பெறாமல் இருந்து விட்டாய். நீயும் இந்த மலையை வலம் வந்தால் அடிக்கு ஒரு அசுவமேத யாகம் செய்த பலனை அடைவாய்' என்று கூறி விண்ணகம் சென்றார்கள்.

 

மன்னனும் அன்றே அரசுரிமை நீங்கி, பலமுறை கிரிவலம் செய்து கயிலாயம் அடைந்தான் என கூறப்படுகிறது. அற்புத ங்கள் பல அருளும் இந்த கிரிவல மகிமை யை உணர்ந்த பலரும் இன்றும் நடந்தபடி யே உள்ளனர். 

 

நாளுக்கு நாள் கூட்டம் பெருகியபடியே இருக்கும் இந்த கிரிவல பிரதட்சணத்தை முதன்முதலில் நடத்திக் காட்டியவள் அன்னை பராசக்தி. அதனாலேயே தீப நாள் முடிந்த மூன்றாம் அன்னையோடு அண்ணாமலையாரும் தன்னைத்தானே சுற்றி வரும் அருள் லீலையை நடத்தி வருகிறார்கள். அவரோடு கிராம தேவதை யான அன்னை துர்கையும் சுற்றி வருகிறாள் என்பது விசேஷம்.

 

அண்ணாமலையார் கிரிவலம்

 

"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே..."

 

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.