Breaking News :

Sunday, February 23
.

பைரவருக்கு எந்த கிழமை என்ன பூஜை?


ஞாயிற்றுக்கிழமை
இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு  கிடைக்கும் கடன் வாங்கி வட்டியும் அசையும் கட்டிடக்கலை முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில்  கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி புனுகு சாற்றி வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

திங்கட்கிழமை
வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும் திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டால் வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருட்கள் திரும்பப் பெறலாம்.

புதன்கிழமை
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

வியாழக்கிழமை
விளக்கேற்றி வந்தால் ஏவல் பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை
மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெறும் கிடைக்கும்.

சனிக்கிழமை
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி ஏழரைச்சனி அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பாள்.  இவரை  வழிபட்டால் சர்ப்பம் தோஷங்கள் நீங்கும்.

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அருளினால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம் சுவாதி மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும் தொழிலில் லாபம் கிட்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.