Breaking News :

Thursday, November 21
.

தட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்!


வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

சிவனாரின் வடிவங்களில் ஒன்று என்கிறது சிவஞான போதகம். சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தென் முகக் கடவுள். தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால்தான், அவரின் திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம். தட்சிணம் என்றால் தெற்கு.

சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி, சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் வந்து, உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானமும் யோகமும் வேண்டுவோர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

தட்சிணம் என்றால் என்ன?

தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடு பவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தட்சிணாமூர்த்தி. ஞானமானது தட்சிணா மூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தட்சிணா மூர்த்தி என நான்கு நிலை களில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்க ளில் விளங்குபவர் வியாக் யான தட்சிணாமூர்த்தியே ஆவார்.

வேதாகமங்க ளின் நுட்பமான உண்மை களை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாத னர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக் கின்றனர்.

குருவின் சின்முத்திரை

வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள்.  இதில் கட்டை விரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல்மனிதனைக் குறிக்கும்.

நடுவிரல் ஆசை யையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி,கெட்டகர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாக லாம் என்பதே இதன் பொருளாகும்.

*தட்சிணாமூர்த்திக்குரிய மூலமந்திரம்*
*ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ*;

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது விசேஷம். நற்பலன் களையெல்லாம் வழங்கும்.

அதேபோல், வியாழக்கிழமை களிலும் பௌர்ணமி தினங்க ளிலும் சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம். தம்பதி சமேதராக இருந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்  குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையெல்லாம் அறவே மாறிவிடும். முகத்தில் தேஜஸ் குடிகொள்ளும். எடுக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வாக்குவன்மை பலமாகும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபா ரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.

*தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்*
*ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே*
*த்யாநஸ்தாய தீமஹி*
*தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்*

வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை
கொண்டைக்கடலை மாலை அணிவித்து,  வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.