சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களில் ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை மறைத்துக் கூறியுள்ளனர்.
அனுமனின் கீழ்க்கண்ட மூல மந்திரம் கோரக்கர் அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அனுமந்தர் வசிய மந்திரம்
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா
ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா
அரிராம தூதா
அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக
வருக
வசி வசி சுவாகா.
இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் உரு செபிக்க சித்தியாகும்.
செபிக்கும் முறை
மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்க வேண்டும்.
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்க வேண்டும்.
பெண்கள் சகவாசம், மது, மாமிசம், புகையிலை போன்ற பழக்கமில்லாமல் இருக்க வேண்டும்.
மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக் கூடாது.
நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது. சகல
காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் சகலமும் மிரண்டு ஓடிவிடும்
அனுமந்த உபாசகரை எதிர்த்தவன் பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.