Breaking News :

Thursday, November 21
.

கந்த சஷ்டி ஏன் ?


முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று போரில் வெற்றி பெற்றதையே கந்த சஷ்டியாக கொண்டாடுகிறோம்.

 

இந்நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. எனவே, கந்த சஷ்டி திருவிழா இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 

காஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்தவர்கள் அசுரர்களான சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன், இவர்களில் தவத்தில் ஈடுபட்ட சூரபத்மன் சிவபெருமானின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னை வெல்ல முடியாது என வரம் பெற்றான்.

 

இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையில் அடைத்தனர். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தவே, அவர்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானைச் சரணடைந்துள்ளனர்.

 

மேலும், சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களை காப்பாற்றும் நோக்குடன் அவர் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அந்த தீப்பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளாக மாறின.

 

கார்த்திகைப் பெண்கள் அவர்களை பாலூட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கினர். அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்த பார்வதி ஒரே உருவமாக மாற்றி 'கந்தன்' என அக்குழந்தைக்கு பெயரிட்டு மகிழ்ந்தாள். தன் சக்தியெல்லாம் திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை கந்தனுக்கு பரிசாக கொடுத்தாள். வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு நாட்களும் சஷ்டி விரதமிருப்பர்.

 

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்புத அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் பருகி ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஆறாம் நாளான கந்த சஷ்டி அன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். கடும் விரதம் இருக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்களும் இரவு ஒருவேளை பால் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் முழு விரதத்தை கடைபிடிக்கலாம்.

 

இந்தாண்டு சஷ்டி விரதம் துவங்கியிருக்கும் நிலையில், நவம்பர் 18,2023 கந்த சஷ்டி அன்று கோயில்களில் சூரசம்ஹார லீலை நடக்கும். சஷ்டி விரதமிருக்கும் தம்பதியினருக்கு அறிவும், அழகும் உள்ள குழந்தை பிறப்பர் என்பது ஐதீகம்.

 

ஓம் சரவண பவ. ..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.