Breaking News :

Thursday, November 21
.

கர்பரக்ஷாம்பிகை, திருகருக்காவூர், பாபநாசம்.


தஞ்சாவூர் அருகில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருகருகாவூர்.

இங்கு அம்மன் பெயர் கர்பரக்ஷாம்பிகை .இறைவன் பெயர் முல்லைநாதர்.
கர்ப்பிணி பெண்களின் கருவை காக்கும் கர்பரக்ஷாம்பிகை.

அம்மன் பெயரில் உள்ளது போல கர்ப்பிணி பெண்களின் கருவை காப்பதும் ,சுக பிரசவம் ஆவதற்கும் பெண்கள் இந்த அம்மனை மனம் உருகி வேண்டுவார்கள்.அதுமட்டுமல்ல குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வேண்டுவதும் உண்டு.

முன்னொரு காலத்தில் கௌதமர்; மற்றும் கர்கேயர் என்ற இரு முனிவர்கள் முல்லைவனம் என்ற இடத்தில் தவம் இருந்தார்கள் .அது ஒரு முல்லை தோட்டம். நித்ருவ வேதிகா என்ற குழந்தை இல்லா தம்பதியரும் அங்கு தங்கி முனிவர்களுக்கு சேவை செய்து வந்தனர் .

முனிவர்கள் குழந்தை வரம் வேண்டி கர்பரக்ஷாம்பிகையை வேண்டுமாறு தம்பதிகளுக்கு அறிவுரை சொல்கிறார்கள் .அவர்கள் வேண்டியபடி அம்மன் அவர்களுக்கு குழந்தை வரம் அளிக்கிறாள் .

நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கணவர் வீட்டில் இல்லாத சமயம் வேதிகா மயங்கி விழுகிறாள்.அந்நேரம் உர்த்யபாத என்ற முனிவர் பிச்சை கேட்டு வருகிறார் .மயக்கத்தில் இருந்த வேதிகாவால் முனிவருக்கு ஏதும் அளிக்க முடியவில்லை .

கோபத்தில் முனிவர் சபிக்கிறார் .அதில் கரு கலைந்து வெளியேறி விடுகிறது .அதிர்ச்சி அடைந்த வேதிகா கர்பரக்ஷாம்பிகை அம்மனை வேண்டுகிறார் , ப்ரத்யக்ஷமான அம்மன் அந்த கருவை தாங்கி ஒரு குவளையில் வைத்து காத்து முழு வளர்ச்சி அடைந்தவுடன் வேதிகாவிடம் அந்த ஆண் குழந்தையை கொடுக்கிறாள்.

மகிழ்ச்சியில் திளைத்த வேதிகா அம்மனிடம் அதே இடத்தில் தங்கி கர்ப்பிணிகளையும் ,அவர்கள் வயிற்றில்வளரும் கருக்களையும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.வேதிகாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அம்மனும் அந்த இடத்தில் இருந்து கர்ப்பிணிகளின் கருக்களை அம்மனாக வரம் தருகிறாள் .

அது மட்டுமல்ல குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கும் அருள் பாலிக்கிறாள்.கருவை காப்பதாலேயே அம்மனுக்கு கர்பரக்ஷாம்பிகை என்று பெயர்.ஊருக்கும்அதனால் திருகருகாவூர் என்று பெயர்.

இறைவனுக்கு பெயர் முல்லைவனநாதர்.முல்லை வன கொடிகள் இறைவன் மேல் படர்ந்ததால் அந்த தடம் இன்றும் சிவா லிங்கத்தின் மேல் இருப்பதை காணலாம் என்று சொல்ல படுகிறது.

இந்த லிங்கம் எறும்பு புற்றினால் ஆனது என்பதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது .குணபடுத்த முடியாத நோய்களால் அவதி படுபவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு புணுகு சட்டம் சார்த்துவார்கள் .அப்படி செய்து நோய் குணமானவர்கள் ஏராளம் .இன்றும் இந்த வேண்டுதல் பக்தர்களால் செய்ய படுகிறது .

ஓம் தேவேந்திராணி நமச்துபயம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ,ஆரோக்கியம்
புத்திர லாபாம்ச தேஹிமே
பத்திம் தேஹி ,சுதம் தேஹி
சௌபாக்கிய தேஹிமே சுபே
சௌமங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்ப ரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மகா யோக்ஹினிய தீச்வரி
நந்தகோபம் சுதம் தேவம்
பத்திம் மே குருதே நம
சுக பிரசவம் ஆக சொல்ல வேண்டிய இரு ஸ்லோகங்கள்

1. ஹே சங்கரா சமாரஹர ப்ரஹ்மததி
நாதரி மன்னத சம்ப சசிசூடா
ஹரத்திரி சூலின் சம்போ சுக பிரசவ க்ரித்பவமே
தாயாலோ ஹே மாதவி வனேச பளையம்மன் நமஸ்தே

2. ஹிமவாத் உத்தரே பார்ஸ்வே சுரதா
நமயாக்ஷினே
தஸ்ய சமரன மத்ரேயா விசல்யா
கர்பினேபவது

அமைவிடம் அருள்மிகு கர்பரக்ஷாம்பிகை முல்லை வனநாதர் கோவில், திருகருகாவூர், பாபநாசம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.