விளையாட்டு தனமானவர் என சாதாரணமாக நினைத்து விடுவதால் கிருஷ்ணரை பலரும் வணங்குவதில்லை. ஆனால் குழந்தை தனமான மனம் கொண்ட கிருஷ்ணரை உண்மையான அன்புடன் வழிபட்டால், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிருஷ்ணர் வீடு தேடி வருவார் என்பது பலருக்கும் தெரியாது.
கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் எந்த குறையும் இல்லாமல் நிறைவு மட்டுமே இருக்கும் என்பதற்கு குசேலரின் கதையே உதாரணம்.
அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று அனைவரும் ஆசையாக, விருப்பமுடன் வீடு முழுவதும் குழந்தை கிருஷ்ணரின் பாத தடங்களை வரைந்து கிருஷ்ணரை வீட்டிற்கு அழைக்கிறார்கள்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமாக விளங்குவது கிருஷ்ண அவதாரம்.
தசாவதாரங்களில் மிகவும் தனித்துவமான அவதாரம் இதுவாகும்.
திருமாலின் மற்ற அவதாரங்கள் அனைத்தும் உலகை காப்பதற்காக, தீமைகளை அழிப்பதற்காகவும் எடுக்கப்பட்டதாகும்.
ஆனால் கிருஷ்ண அவதாரம் என்பது உலகிற்கு தர்மத்தை, நீதியை, பக்தியை போதிப்பதற்காக எடுக்கப்பட்டதாகும்.
இந்த அவதாரத்தில் மட்டுமே பகவான் கிருஷ்ணர், அனைத்து காலத்திற்கும் பொருந்தும் வகையிலான பகவத் கீதையை போதித்துள்ளார்.
உலகில் உள்ள ஒட்டு மொத்த தீயவர்களையும் அழித்து, உலகை சுத்தம் செய்வதற்காக எடுத்த அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
இதைத் தொடர்ந்து கலியுகத்தில் மேலும் அதிகரித்த தீயவர்களை அழித்து, மீண்டும் சத்திய யுகத்தை நிறுவ கலியுகத்தின் முடிவில் கல்கியாகவும் திருமால் அவதாரம் எடுக்க உள்ளார்.
அதனால் எப்படிப்பட்ட துன்பம், கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.
கிருஷ்ணருக்குரிய முக்கியமான 5 மந்திரங்களை சொல்லி வருவதால் வெற்றி, செல்வ வளம் தொழில், இறையருள், உறவுகள் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவ ஆகியவை வளர்ந்து கொண்டே செல்லும்.
🤝தினமும் காலையில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் இந்த மந்திரங்களை சொல்வது சிறப்பு.
எப்படி பிரச்சனையாக இருந்தாலும் அது தீர வேண்டும் என நினைப்பவர்கள் தினமும், நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். சரியாக ஒன்றரை லட்சம் முறை இந்த மந்திரங்களை நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் உங்களின் வேண்டுதல் நிறைவேறி விடும்.
இந்த மந்திரங்களை ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம்.
அதிகாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, கிருஷ்ணருக்கு பூக்களால் அலங்கரித்து, அவருக்கு விருப்பமான நைவேத்தியம் செய்து படைத்து வைத்து இந்த மந்திரங்களை சொல்வது இன்னும் விரைவான பலனை தரும்.
சக்திவாய்ந்த 5 கிருஷ்ண மந்திரங்கள்
1. கிருஷ்ண காயத்ரி மந்திரம் :
ஓம் தேவகீநந்தனாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்
2. ஹரே கிருஷ்ண மகாமந்திரம் :
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம
ஹரே ஹரே
3. கிருஷ்ணர் மூல மந்திரம் :
ஓம் கிருஷ்ணாய நமஹ
4. ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய சரணம் மமஹ
5. கிருஷ்ண மந்திரம் :
கிருஷ்ணாய வாசுதேவாய ஹராரே
பரமாத்மனே ப்ரணதாஹா
க்ளேஷணஸயே கோவிந்தாய நமோ நமஹ.
இந்த மந்திரங்களை திங்கட்கிழமையில் சொல்ல துவங்குவது சிறப்பானது.
இந்த மந்திரங்களை சொல்லும் போது மஞ்சள் நிற ஆடை உடுத்தி, வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்.
வீட்டில் நெய் விளக்கேற்றி வைத்து, மனதை அமைதிபடுத்திக் கொண்டு, கிருஷ்ணரின் படம் அல்லது சிலைக்கு முன் அமர்ந்த இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.