1 மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன் வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது.
2. ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
3. பாயாசம் செய்து நிவேதனப் பொருளாக வைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
4. பூஜை அறையில் ராமர் படம் இருப்பது சிறப்புடையது ஆகும்.
5. ராகு தோஷத்தினால் பிடிக்கப்பட்டுப் புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினர் திருமணஞ்சேரித் தலத்திற்குச் சென்று அங்குள்ள சப்ர சாகர தீர்த்த்தில் நீராடி, அங்கு கோயில் கொண்டிருக்கும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து வழிபட்டால் ராகுவின் அருள்கிட்டும். நிவேதனத்தைச் சிறிது அருந்தினால் ராகு தோஷம் நீங்கப் பெற்றுப் புத்திரப்பேறு பெறுவர்.
6. `புத்ரதா' என்றழைக்கப்படும் தை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று உபவாசம் இருந்து நாராயணனை வழிபட்டு மறுநாள் துவாதசி அன்று துவாதசிப் பாரணை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
7. புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும்.
8. சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும்.
9. வெள்ளியினால் செய்த நாகத்தைத் தானம் செய்தாலும் பலன் உண்டு.
10. கிருத்திகை விரதம் இடைவிடாது இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும்.
11. சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய புத்திர பாக்கியம் உண்டாகும்.
12. ஹரித்துவார் சென்று கங்கையில் நீராடி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் புத்திர பாக்கியம் கைகூடும்.
13. ஒருமுறை காசிக்கு சென்று கங்கையில் நீராடி, உங்கள் கைகளினாலேயே கங்கை நீரைத் கொண்டு, காசி விஸ்வநாதருக்கு வில்வம் சேர்த்து கங்கா தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
14. தங்கள் மனைவியருடன் அமைந்துள்ள நவக்கிரக மூர்த்திகளை வழிபட்டால் திருமணம் கைகூடி உரிய காலத்தில் புத்திர பாக்கியம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கை இனி தாய் அமையும்.
15. பசு வளர்த்து அதற்கு சேவை செய்து வந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
16. திருவாரூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ராஜகோபாலப் பெருமாள் ஆலயம். இந்த பெருமாள் குழந்தை வடிவில் உள்ளதால் இவரை வழிப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
17. சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாதவர்கள் அங்கு சென்று சமயபுரத்தாளை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
18. மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள மடப்புரம் காளிக்கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் தங்கள் சேலையைக் கிழித்து தொட்டில் கட்டினால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
19. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
20. குழந்தை இல்லாத குறையை நீக்க அரச மரமும், வேம்பும் சேர்ந்துள்ள ஆலயத்திற்கு காலை 7 மணிக்குள் சென்று 108 முறை 48 நாட்கள் சுற்றி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த 48 நாளும் நல்லெண்ணை திரி போட்டு விளக்கு ஏற்றி வரவும்.
21. அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யாதவர்களுக்கு சந்ததிகள் உண்டாகாது. புத்திர தோஷம் ஏற்படும்.
22. வைகாசி விசாக நட்சத்திரத்து அன்று, பகல் உணவு அருந்தி, மாலை கோவில்களுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடுவதால் புத்திர தோஷம், புத்திர சோகம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும்.
23. காலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி காயும் முன் அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள் வலது பக்க மாகவும் பெண்கள் இடது பக்கமாகசுற்ற வேண்டும்.
எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் மழலை செல்வத்திற்கு ஈடாகாது என்பார்கள். பெண்மை முழுமை பெறுவதும் தாய்மையில் தான் என்பார்கள். அப்படிப்பட்ட குழந்தை பாக்கியம் என்பது திருமணமான அனைத்து பெண்களுக்கும் எளிதில் கிடைத்து விடுவது கிடையாது. இன்றைய மாறி வரும் கால கட்டத்தில் குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவமனைகளை நாடுபவர்களின் எண்ணிக்கையும், அதற்காக ஏங்கி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சென்று வழிபட வேண்டிய கோவில்கள் என எத்தனையோ இருந்தாலும், தமிழகத்தில் புகழ்பெற்றதாக திகழ்வது கும்பகோணம் மாவட்டம் திருக்கருக்காவூரில் அமைந்துள்ள கர்ப்பரக்ஷாம்பிகை அம்மன் கோவில் தான். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் அனைவராலும் கும்பகோணத்திற்கு சென்று வழிபட்டு, பலனடைய முடியாது. அப்படி கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் சென்னை வடபழனியில் அமைந்துள்ள கோவிலுக்கு வந்து வழிபடலாம்.
திருக்கருக்காவூரை போன்றே சென்னை வடபழனியிலும் கர்ப்பரக்ஷாம்பிகை சமேத முல்லைவனநாதர் என்ற திருநாமத்துடன் அம்பிகையும், சிவ பெருமானும் காட்சி தருகிறார்கள். ஏராமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு, குழந்தை வரம் பெற்றுள்ளனர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இந்த ஆலயத்திற்கு வந்து, இங்குள்ள கடையில் பூஜைக்கு தேவையான மஞ்சள், பூ போன்ற பொருட்களை வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். பிரார்த்தனைக்காக வருபவர்களை தனியாக அமர வைத்து, அம்பாளின் முகத்திற்கு மட்டும் நெய்யால் அபிஷேகம் செய்கிறார்கள். அம்மன் திருமுகத்தில் பட்டு, அருள் நிறைந்த இந்த நெய்யை தனியாக ஒரு பாட்டிலில் பிடித்து குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
இந்த நெய் பாட்டிலுடன் கர்ப்பரக்ஷாம்பிகையின் 48 போற்றிகள் அடங்கிய புத்தகம், சுவாமியின் படம் ஒன்றையும் கொடுக்கிறார்கள். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தினமும் தொடர்ந்து 48 நாட்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்பட்ட இந்த நெய்யை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு, 48 போற்றிகளை படித்து, நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வர வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு 48 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பாக குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது.
பிறகு ஏழாவது மாதத்தில் வந்து அந்த பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தும் போது அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதோடு காணிக்கை செலுத்தி, அம்மனுக்கு தைல காப்பு செலுத்தி, அந்த தைலத்தை வாங்கிக் கொண்டு போய் தினமும் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் தடவி வந்தால், அவருக்கு சுக பிரசவம் நடக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருந்து அருளை வாரி வழங்கும் கர்ப்பரக்ஷாம்பிகையை நம்பிக்கையுடன் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
கர்ப்பரக்ஷாம்பிகை ஸ்லோகம் :
ஹே ஸங்கர ஸமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத சரம்ப சரிசூட
ஹர திரிசூலின் சம்பே சுகப்ரஸவ
க்ருத் பவமே தயாளோ
ஹே மாதவி வனேஸ
பாலயமாம் நமஸ்தே!
ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸீரதர நாம யாஷினீ
தஸ்யா ஸ்மரண மாத்ரேணா
விசல்யா கர்ப்பிணி பவேது!!
குழந்தை பாக்கியம் அருளும் திருத்தலங்கள்! -
ஆத்தாள், அம்பிகை, அம்பாள், அம்மன் என இறைவியை அழைக்கிறோம், காரணம் ‘அவள் நம் அன்னை’ எனும் எண்ணமே இதன் வெளிப்பாடு. பிற உயிரினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு கடவுள் பற்றிய அதீத நம்பிக்கையும், அனுபவமும், அறிவும் ஏற்படக் காரணம் நம் சமுதாயத்தில் அன்னை என்ற ஸ்தானத்தின் மேல் நாம் வைத்திருக்கும் அளவுகடந்த அன்புதான் எனலாம். அன்பே இறைவன் என அறிவதற்கு, அன்பென்றால் என்னவென்று நமக்குத் தெரிய வேண்டுமல்லவா? அந்த அன்பின் பரிபூரண சொரூபமாய் விளங்குபவள் தாய், அதனாலேயே இறைவியை உரிமையோடு ‘அம்மா’ என அழைக்கிறோம்!
குழந்தைச் செல்வம் என்பது பாக்கியம். ஆணும் பெண்ணும் திருமணமாகி சந்தான பாக்கியம் பெறும்போது, தாய் தந்தை எனும் பதவியைப் பெற்று தங்கள் வாழ்க்கையின் முக்கியமான இடத்தை வந்தடைகின்றனர். சில பெண்களுக்கு சில காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப் போகிறது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் அடையாமல் ஏங்குவோரும் உண்டு. அனைத்து உயிருக்கும் அன்னையாய் இருக்கும் அம்பிகையின் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்குச் சென்று வழிபடும்போது இந்த பிரச்னை விலகுகிறது.
கருவளர்சேரி திருத்தலம்
சகல உயிர்களுக்கும் அன்னையான இறைவி, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’ தாயாக அருள்பாலிக்கிறாள். இறைவன்: அருள்மிகு அகஸ்தீஸ்வரர். கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு உடல்ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். அதனாலேயே தேவியை ‘கருவளர் நாயகி’ என்ற திருப்பெயரிலும் அழைக்கின்றனர்.
திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் அவள் சந்நிதியில் பூசை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூசி வர தடைகளை எல்லாம் நீக்கி, மகப்பேற்றை அருளுகிறாள் கருவளர் நாயகி அன்னை.
கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோயிலுக்கு வந்து தொட்டில், வளையல் ஆகியவற்றை வேண்டுதல் பொருளாக சமர்ப்பிப்பதையும் நாம் காணமுடிகிறது.
கும்பகோணம் & வலங்கைமான் பாதையில் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. கோயில் நேரம் காலை 8 மணி முதல் 12 மணிவரை; மாலை 4 மணி முதல் 8 மணிவரை. இந்த ஊருக்கு அருகிலேயே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாத நாயனார் பிறந்து முத்தி பெற்ற தலமான ஏனநல்லூருக்கும் சென்று இறைவனை வழிபட்டு வரலாம்.
திருக்கருகாவூர் திருத்தலம்
இறைவன் முல்லைவனநாதருடன், திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. கரும்பைப் போல் இனிமையானவள் என்பதால் அம்பிகைக்கு கரும்பணையாள் என்ற திருப்பெயரும் உண்டு. குழந்தை பாக்கியம் தடைப்படும் பெண்கள், இங்கே கோயில் கொண்டிருக்கும் அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமுருக வேண்டி, நெய்யினால் சந்நிதியின் படிகளை மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை 45 நாள்கள் உண்டு வந்தால், குழந்தைப்பேறு கிட்டும்.
இந்த பிரார்த்தனையை வாரத்தின் அனைத்து நாள்களிலும் செய்யலாம். பிரார்த்தனை நிறைவேறப் பெற்றவர்கள் தொட்டில் கட்டி, துலாபாரம் தூக்குகின்றனர். அம்மனிடம் வைத்து பூசிக்கப்பட்ட விளக்கெண்ணெயையும் பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். கர்ப்பத்தினால் வலி ஏற்படும்போது இந்த எண்ணெயைத் தேய்த்தால் சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர், பாபநாசம் வழியாக இக்கோயிலை அடையலாம். கோயில் நேரம் காலை 6 மணி முதல் 12 மணிவரை; மதியம் 3 மணி முதல் 8 மணிவரை.
புத்திர பாக்கியம் அருளும் அபிராமி அந்தாதி பாடல் - 65:
ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே!