கந்தர்வ லோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தை யைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள்.
ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலு ள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகை யைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண் டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரி வித்தாள். விசுவாவஸு கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பி கை சியாமளையை வழிபடும்படி கூறினான்.
அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கே யே தங்கி சேவை செய்தாள்.
அவளுக்கு மூன்று வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, என்ன வரம் வேண்டும் கேள், என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போ தும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.
அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியி ல் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன் படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலை யாக அவதரித்தாள் வித்யாவதி.
அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.
மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் மூன்று வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவு க்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர்.
ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள்.
இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தை க்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்த லத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண் களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள்.
தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரி யமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு மதுரை என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சியின்ன் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.
மீனாட்சி திருமணம்
மலயத்துவச பாண்டியன் மனைவி காஞ்சன மாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினி ன்று தோன்றினாள்.
குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது இறைவன் அசரீரியாக இக்கு ழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று கூறினார். இறைவன் கட்ட னைப்படி குழுந்தைக்குத் "தடாதகை" எனப்பெ யரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.
மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதா ல் "கன்னிநாடு" எனப் பெயர் பெற்றது. தடாத கை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகை படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள்.
இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவ னே கணவன் என்பது புலப்பட்டது. திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள்.
சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்க ல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.