மதுரை சித்திரை திருவிழா, கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா தொடங்கியதிலிருந்து காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் நடந்த சுவாமி வீதி உலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது.
இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விழா இன்று மாப்பிள்ளையுடன் தொடங்கியது. அப்போது சுந்தரேசுவரருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
பின்னர் மீனாட்சி- சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தினர்.
Category