ஶ்ரீ குரோதி வருடம் மாசி மாதம் 28 ம் நாள் மார்ச் 12 ம் தேதி புதன் கிழமை அன்று மாசி மகம் 2025 ம் ஆண்டில் மாசி மகம் மகம் நட்சத்திரமானது மார்ச் 12 ம் தேதி அதிகாலை 03.53 மணிக்கு துவங்கி, மார்ச் 13 ம் தேதி அதிகாலை 5.10 மணி வரை பௌர்னமி திதி உள்ளது.
மாசி மகம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் விரதமிருந்து மிகவும் கோலாகலமாக இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.
அன்றைய தினம் கடலாடும் விழா மயான கொள்ளை என்றும் கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.
தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கயிலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.
இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும்.
உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும்.
அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம்.
முன்னொரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகி, உலகமே அழியும் தருணம் ஏற்பட இருந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த பிரம்மன், சிவப்பெருமானிடம் முறையிட, அதற்கு ஈசன், “நீ எதற்கும் கலங்காதே. பிரளயம் எற்பட்டாலும் மீண்டும் அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்.” என்று கூறி, ஒரு கும்பத்தை கொடுத்து, “இதில் நீ படைத்த அனைத்து ஜீவராசிகளின் மூல காரணமாக இருக்கும் வித்துக்களை இதனுள் வைத்து விடு. அத்துடன் புராணங்களையும், மந்திரங்களையம் அதனுடன் வைத்து பூஜை செய். பிறகு அந்த கும்பத்தை மேரு மலையில் வைத்து விடு. அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார் பிரம்ம தேவரிடம் சிவபெருமான்.
சிவபெருமானின் உத்தரவின்படி செய்தார் பிரம்ம தேவர். சில நாட்களுக்கு பிறகு மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து போனது.
மேருமலையில் பிரம்மன் பூஜித்து வைத்த கும்பம், தண்ணீரில் மிதந்து வந்து ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் சிவப்பெருமான், ஒரு வேடன் உருவத்தில் வந்து, அந்த கும்பத்தை நோக்கி அம்பு ஏய்தபோது கும்பத்தின் கூம்பு போன்ற கோணப்பகுதி உடைந்தது.
அந்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்த இடமும், வேடன் உருவத்தில் சிவப்பெருமான் கும்பத்தின் ஒரு மூக்கு போன்ற கோணப்பகுதி உடைத்த இடமும் ஒரே இடம் என்பதால், அந்த இடத்திற்கு “கும்பகோணம்” என்று பெயர் உண்டானது.
கும்பம் உடைந்தபோது அதில் இருந்து அமுதமும் வெளியேறியது. அந்த அமுதம் நனைத்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, அதில் சர்வேஸ்வரர் ஐக்கியமானார். இதனால் அந்த சிவலிங்கம், “ஆதி கும்பேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தின் மூக்கு உடைந்த இடம் என்பதால் கும்பக்கோணம், “குடமூக்கு” என்ற பெயரும் பெற்ற ஸ்தலம் ஆகும்.
மாசி மகம் அன்று கும்பகோணத்தில் விசேஷமாக கொண்டாடுவார்கள். அதேபோல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது.
மாசி மகத்திற்கு சக்தி அதிகம் என்பதை மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே புண்ணிய நதிகள் என்று சொல்லக்கூடிய கங்கை, காவேரி, யமுனை போன்ற பல புண்ணிய நதிகள் உணர்ந்தார்கள்.
ஒருவருடைய கஷ்டத்தை கேட்டுக்கொண்டே இருந்தால் கேட்பவர்களுக்கும் அந்த கஷ்டம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள் கூறுவார்கள், “ஒருவரை பார்த்து “ஐBhakthi Planetயோ பாவம்” என்றால், சொல்பவர்களுக்கு ஈரேழு ஜென்மபாவங்கள் தேடி வரும். அந்த அளவில் சக்திபடைத்து துஷ்ட தேவதை. துஷ்டதேவதைதான் கஷ்டத்தை தருவது. இந்த துஷ்ட தேவதை மனிதர்களிடம் மட்டும் தன் வேலையை காட்டுவதில்லை. பலருடைய பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதிகளிடத்திலும் தன் வேலையை காட்டியது. ஆம். பலருடைய கர்மாக்களை புண்ணிய நதிகள் நீக்கியதால், நதி தேவதைகளின் உடல் கருமையாக மாறி கஷ்டத்திற்கு ஆளானார்கள். இந்த நிலை தீர என்ன செய்ய வேண்டும்? என்று சிவபெருமானிடம் கேட்டார்கள்.
அதற்கு இறைவன், “நீங்கள் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கும்பகோணம் மகா மகக்குளத்தில் நீராடினால், உங்கள் பாவங்கள் நீங்கும்.” என்றார்.
சர்வேஸ்வரன் கூறியது போல், மகாமககுளத்தில் நீராடி தங்களுடைய பாவத்தை போக்கிகொண்டார்கள் அந்த புண்ணியநதி தேவதைகள்.
பாவம் தீர கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதியில் குளித்தால் ஒருவருடைய கர்மாக்கள் நீங்கும் என்பார்கள். ஆனால் அங்கேயே பிறந்தவர்களின் கர்மபயன் தீர வேண்டும் என்றால், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால்தான் நீங்கும் என்கிறது புராணம். எப்படி மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதோ, அதுபோல்தான், “எந்த புண்ணிய நதிகரையில் பிறந்தவர்களாக இருந்தாலும், மகாமககுளத்தில் நீராடினால்தான் கர்மாக்கள் நீங்கும்.” என்கிறது சாஸ்திரம்.
புண்ணிய நதியில் நீராடினால் கர்மபயன் நீங்குமா? என்ற சந்தேகத்தோடு நீராடக்கூடாது. இதற்கு ஒரு கதை இருக்கிறது
ஒரு முனிவர் இருந்தார். அவர் பல வருடங்களாக மக்களுக்கு உபதேசங்கள் செய்து வந்தார். ஒருநாள் கருடன் பறக்கும்போது தன் சிறகு இழந்து, அந்த முனிவர் காலில் வந்து விழுந்தது. இதை கண்ட முனிவர் தன் கமண்டலத்தில் இருந்த நீரை அந்த கருடன் மேல் தெளித்தார். உடனே அது வலிமை பெற்று பறந்து சென்றது. இதை கண்ட பக்தர்கள், “சாமி உங்களிடம்தான் நாங்கள் தினமும் உபதேசம் கேட்கிறோம். எங்களுக்கும் உடல் உபாதைகள் வந்தபோது, நீங்களே எங்களை குணப்படுத்தி இருக்கலாமே.” என்றார்கள்.
அதற்கு அந்த முனிவர், அந்த கருடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னிடம் சரண் அடைந்தது. நான் அதை குணப்படுத்துவேனா அல்லது மாட்டேனா? என்ற சந்தேகம் அந்த கருடனுக்கு இல்லை. அதனால் அந்த கருடன் குணம் அடைந்தது. ஆனால் என் மேல் உங்களுக்கு சந்தேகம் இருந்தது. எனக்கு சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் அதிகமாகவே இருப்பதால், நன்மைகள் கிடைக்க தாமதமாகிறது.
குழம்பிய மனம் குப்பைக்கு சமமானது. நம்பிக்கையோடு இருந்தால்தான் எல்லாமே நன்மையாக முடியும்.” என்றார் அந்த மகான்.
ஆம்…அதுபோல, மகாமக குளத்தில் நீராடினால் கர்மவினை நீங்குமா? என்ற சந்தேகத்துடன் குளித்தால் நீங்காது. நீங்கும் – சுபிக்ஷம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்பவேண்டும். அப்படி நம்பினால்தான் நன்மைகள் நிழல் போல் தொடர்ந்து வரும்.
தக்ஷன் தனக்கு சக்திதேவியே மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பி வரம்Manamakkal Malai பெற்றார். அதன்படி சிவனின் கட்டளையை ஏற்று ஈஸ்வரி, இமயமலைச் சாரலில் காளிங்க நதியில் ஒரு வலம்புரிச் சங்காக மாறி தவம் இருந்தார்.
மாசி மாதம் பௌர்ணமி அன்று, அந்த பக்கமாக வந்த தக்ஷன் கண்ணில் வெண்மையான வலம்புரி சங்கு தெரிந்தது. அந்த சங்கை தன் இரு கரங்களால் எடுத்தவுடன் அந்த வலம்புரிசங்கு குழந்தையாக மாறியது. அந்த பெண் குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயர் வைத்தான் தக்ஷன். சிவபெருமானுக்கும் தக்ஷனுக்கும் ஏற்பட்ட தகராறில் தாட்சாயினி தீக்குள் விழுந்தாள். ஆனாலும் இறைவியின் உடல்உறுப்புகள் விழுந்த பகுதிகள் எல்லாம் சக்தி பீடங்களாக உருவெடுத்து உலகம் முழுவதும் தோன்றி உலக நாயகியாக பக்தர்களை காக்கிறார்.
மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி.
மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணுபகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.!
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
இறையருளால் அமுதம் பொங்கியதாகக் கூறப்படும் இப்புனிதமான தலத்தில் உள்ள மகாமகத் தடாகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி முழுமதி நாளில் குரு சிம்மராசிகளுக்குச் செல்லுங்கால் கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயூ, நர்மதை, துங்கபத்திரை, கோதாவரி, கிருஷ்ணை, காவேரி ஆகிய ஒன்பது கன்னியரும் மக்களால் தங்களிடத்து இடப்பட்ட பாவச்சுமையை நீராடிப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். மகாமகப் பெருவிழாவும் , புனித நீராடலும் சிறப்புற நடைபெறும் அன்று நீராடினால் மேற்கண்ட புண்ணிய நதிகளில் நீராடியதற்கு ஒப்பாகும் என்று நம்பப்படுகிறது.
இத்தலம் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. பிரளய காலத்தில் உலகு அழிகிறபோது மீண்டும் படைப்பதற்கான மூலப்பொருட்களைக் காத்தருள வேண்டும் என்று நான்முகன் சிவனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான் உலகத்திலுள்ள உத்தமமான புண்ணியத் தலத்திலிருந்து மண் எடுத்துத் தேவாமிர்தத்தை விட்டுப் பிசைந்து ஒரு கலசம் செய்து அதை அமிர்தத்தால் நிரப்பி வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய அறிவுக்கருவிகள் அனைத்தையும் குடத்தில் பெய்து, மாவிலை பரப்பி குடத்து வாயில் தேங்காய் வைத்து மூடிப் பூவால் சாத்திச் சத்தியலோகமாகிய நான்முகனின் உறைவிடத்தில் மேருமலையில் ஒரு உரியில் தொங்க விட வேண்டுமென்று பிரமனுக்குக் கூறினார். பிரமனும் அவ்வாறே செய்தார்.
கலியுக முடிவில் பிரளயம் தோன்றியபோது அமுதக்கலசம் ஒன்றினைப் பிரளயம் தென்புறம் நோக்கி அடித்துச் சென்றது. அப்போது அந்த அமுதக் கலசம் குடந்தை நகரை அடைந்ததும் நகராது நின்றது. அப்போது சிவபெருமான் வேடன் வடிவம் தாங்கி வந்து அம்பை செலுத்திக் குடத்தை உடைத்தார். அக்குடத்திலிருந்து அமுதம் வெளிவந்து ஐந்து யோசனை தூரம் பரவியது. குடத்தின் வாய் விழ்ந்த இடத்தில் குடவாயில் என்னும் சிவத்தலமாகும். குடத்திலிருந்து சிதறிய அமுதத்தை இரு குடங்களாகச் செய்தார். அவையே குடந்தையிலுள்ள மகாமகக்குளம் பொற்றாமரைக் குளம் என்று தலபுராணம் கூறும். இப்பொய்கைச் சிவனின் ஏவலால் தேவசிற்பி அமைத்தான் என்பதும் புராணம் கூறும் மற்றொரு பழைய செய்தியாகும்.
கோவிலுக்கு முன்புறத்தில் உள்ள மண்டபங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான தாணத்தைப் பற்றிய சிற்பத் தொகுதிகள் செதுகப்பட்டுள்ளன. தானங்களில் சிறந்தவை பதினாறு என்று ஆன்றோர் கூறியுள்ளனர். அத்தகைய பதினாறு வகையான தானியங்ளை இம்மகாமகக் குளக்கரையில் செய்தால் கிடைத்தற்கரிய பலன்கள் கிட்டும் என்று உணர்த்துவதர்காகவே இம்மண்டபங்கள் அமைக்கப் பெற்றிருக்கலாம் என்று கருதலாம். கங்கையில் நீராடி தானங்களை வழங்கினால் எத்தகைய நற்பேறு கிட்டுமோ அத்தகைய நற்பேறு இம்மகாமகக் குளத்தில் நீராடி வழங்கினால் கிட்டும் என்ற நோக்கில் இம்மண்டபங்களும் அதனையொட்டியக் கோயில்களும் கட்டபெற்றிருக்கலாம்.
ஸ்ரீபிரம்மதீர்த்தேசுவரர் ஸ்ரீமுகுந்தேசுவரர் ஸ்ரீதனேசுவரர்
ஸ்ரீஇடபேசுவரர் ஸ்ரீபாணேசுவரர் ஸ்ரீகோணேசுவரர்
ஸ்ரீகுணேசுவரர் ஸ்ரீபைரவேசுவரர் ஸ்ரீஅகத்தீசுவரர்
ஸ்ரீவியாசேசுவரர் ஸ்ரீஉமாபாகேசுவரர் ஸ்ரீநைருதீசுவரர்
ஸ்ரீபிரம்மேசுவரர் ஸ்ரீகங்கேசுவரர் ஸ்ரீமுக்தேசுவரர்
ஸ்ரீஷத்திரபாலேசுவரர் நவகன்னியர் மண்டபம்
தீர்த்தங்கள்
1. வாயு தீர்த்தம்
2. கங்கா தீர்த்தம்
3. பிரம்ம தீர்த்தம்
4. யமுனை தீர்த்தம்
5. குபேர தீர்த்தம்
6. கோதாவரி தீர்த்தம்
7. ஈசான்ய தீர்த்தம்
8. நர்மதை தீர்த்தம்
9. இந்திர தீர்த்தம்
10. சரஸ்வதி தீர்த்தம்
11. அக்னி தீர்த்தம்
12. காவேரி தீர்த்தம்
13. நாக தீர்த்தம்
14. குமரி தீர்த்தம்
15. திருதி தீர்த்தம்
16. பயோதினி(பாலாறு) தீர்த்தம்
17. தேவ தீர்த்தம்
18. வருண தீர்த்தம்
19. சரயு தீர்த்தம்
20. கன்னியா தீர்த்தம் :
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. ஆண்டு தோறும் வருவது மாசிமகம்.
மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.
இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.
கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. மாசிமகத்தன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கவும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் திருக்குளத்திற்கு மாசிமகத்தன்று வருவதாக ஐதீகம்.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் காலமும் வந்தது. இந்த நேரத்தில் உயிர்களைக் காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணியத் தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரிக்கச் செய்தார் சிவபெருமான். அக்கும்பத்தில் அதாவது மண் குடத்தில் நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து உயரமான மேருமலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார்.
பிரளயம் சூழ்ந்தது. அனைத்து உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டன. அமுதம் மற்றும் ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தட்டுப்பட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்கச் செய்தார்.
பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. உயிர்களைக் காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசிமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டதால், பிரம்ஹத்தி என்ற பூதம் வருணனைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டது. வருணன் சிவனை வேண்ட, மாசி மகத்தன்று அத்துன்பத்தில் இருந்து வருணனை விடுவித்தார் அவர். அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்கள் நீங்கும் என்றும் கூடுதலாக வரமளித்தார் சிவன்.
வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டதால், பிரம்ஹத்தி என்ற பூதம் வருணனைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டது. வருணன் சிவனை வேண்ட, மாசி மகத்தன்று அத்துன்பத்தில் இருந்து வருணனை விடுவித்தார் அவர். அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்கள் நீங்கும் என்றும் கூடுதலாக வரமளித்தார் சிவன்.
அம்பிகை தாட்சாயிணியாக அவதரித்த தினம் மாசிமகம் என்று கந்தபுராணம் கூறுகின்றது. கயிலையில் பார்வதியும் சிவனும் அளவளாவிக் கொண்டிருந்தபோது, பரமசிவன் பேரும், குணமும், உருவமும், இல்லாத தேவாதி தேவர்கள் எல்லாம் சக்தியால் அருவுருவமாகவே தெய்வ ஆட்சி செய்கிறோம் என்று கூறினார். அப்போது பார்வதிக்குத் தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணம் மேலோங்கியது. சிவபெருமானோ தான் இல்லாவிட்டால் எதுவும் இயங்காது என்று கூறித் தனித்திருக்க, உலகம் இயங்காது ஜடமாகியது. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற ஈசனின் இத்திருவிளையாடலைக் கண்ட பார்வதிதேவி சிவனின் சக்தியை அறிகிறார்,
இந்த நேரத்தில் சிவனுக்கு, தான் தட்ச பிரஜாபதிக்கு கொடுத்த வரம் நிறைவேறும் தருணம் இது என்பதை உமைக்குச் சொல்லி, யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவம் இருக்க வேண்டுகிறார். அவ்வாறே தேவியும் செய்கிறார்.
இந்நிலையில் மாசி மகத்தன்று தட்ச பிரஜாபதி தன் மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடினான். அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைத் தொட்ட உடனேயே அது பெண்ணுருவாக மாறியது. இது சிவனின் வரம் என்பதை அறிந்து, தட்சன் அத்தெய்வப் பெண்ணுக்கு தாட்சாயிணி என்று பெயர் சூட்டினான். தாட்சாணியாக, பார்வதி அவதரித்த தினம் மாசிமகம்.
பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். அதனால் வைணவத் தலங்களிலும் தீர்த்தவாரி நடைபெறும்.
மாசிமக தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்திற்கு வருவார்கள். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.
இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.
மாசி மாதத்துக்குரிய தெய்வம் மாதவர். மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். மாசி மகத்தில் நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
தீர்த்தவாரிக்குச் சிறப்பு பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.
பெருமாள் இங்கு ஞானப்பிரான் - வலவெந்தை என அழைக்கப்படு கிறார். இக்கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகிறார். அவர் பெயரும் தல சயனப் பெருமாள் (தரை கிடந்த பெருமாள்) என வழங்கிவருகிறது.
இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கிறது என்பது பலரது கருத்து.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மாசி மகம் பற்றிய தகவல்கள் :
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.
5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7. அன்னதானத்தில் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16. மாசிமகம் ஸ்தானம் செய்வேருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். அன்று புண்ணிய நதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கப் பேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக் கலாம் என ஈசனே திணறுவாராம்.
17. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
18. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
19. மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.
20. ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப விழா நடக்கும் சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.
21. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறுகிறது.
22. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண் டத்தில் இடம் கிடைக்கும்.
23. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
24. மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
25. கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்
மயான கொள்ளை