சொர்க்கம் என்றால் ஒன்று தானே என நினைக்கலாம். ஆனால், அங்கும் நான்கு வகை இருக்கிறது.
சொர்க்கத்தின் வாசலில் நுழைவதை ‘ஸாலோக்ய மோட்சம்’ என்பர்.
பின்னர் தெய்வம் குடியிருக்கும் வீட்டுக்குள் சென்று தெய்வத்தின் அருகில் போய் நிற்பது ‘ஸாமீப்ய மோட்சம்.
இதையடுத்து அத்தெய்வத்தை கண்கொட்டாமல் பார்த்து அப்படியே உருகி, அந்த உருவமாகவே மாறிவிடுவது ‘ஸாரூப்ய மோட்சம்’.
அந்த தெய்வத்துடன் ஒன்றி அதனுடன் கலந்து விடுவது ‘ஸாயுஜ்ய மோட்சம்’.
இவற்றையெல்லாம் பார்க்க வேண்டுமானால், இங்கே கொஞ்சமாவது புண்ணியம் செய்ய வேண்டும். நல்லதை மட்டுமே மனதில் நினைக்க வேண்டும்.
இறை நம்பிக்கை உள்ள மக்கள் அனைவரும் நம்புவது பாவ, புண்ணியம். ஒருவர் நல்லெண்ணங்களுடன் புண்ணியங்களை மட்டும் செய்து வந்தால் அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
ஒருவர் உள்ளத்தால், செயலால் பாவகாரியங்களை மட்டும் செய்து வந்தால் அவருக்கு நிச்சயம் நரகம் தான் கிடைக்கும் என நம்புகின்றனர்.
உண்மையில் சொர்க்கம், நரகம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு மனிதன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள மனிதனின் இறை நம்பிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இறை நம்பிக்கை உடைய மனிதன் சொர்க்கத்தை அடைய தன் வாழ்வில் புண்ணிய செயல்களை செய்ய முடியாவிட்டாலும், பாவ செயல்களை செய்யாமல் இருக்க முயல்கிறான்.
ஆனால் இறை நம்பிக்கை இல்லாதவனோ சொர்க்க, நரகம் என்பது இல்லை. மறுபிறவி குறித்த நம்பிக்கை இல்லாதவனாக தான் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் எந்த பாதிப்பும் வராது என நம்புகிறான். அதனால் அவருக்கு மன ரீதியாக தான் தவறான செயல்களைச் செய்தாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பதை மறந்து செய்யத் தொடங்குகிறான்.